பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 3.4 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் பிராமணர்களிடஞ் சென்று நடந்த வர்த்தமானங்களைக் கூறி யாதுசெய்வோமென்று திகைத்துநின்ருர்கள். இதன்மத்தியில் புத்ததன்மக் குடிகளுக்கும், உபாசகர்களுக் கும் சமணமுநிவர்களைக் கழுவிலேற்றிய சங்கதிகள் தெரிந்து இவைகள் யாவும் வேஷப்பிராமணர்களால் நடந்த பாவங்களென்றறிந்து வேஷப்பிராமணர்க ளெங்கெங்கிருக் கின் ருர்களோ அவர்களே யடித்துத் துறத்துங்கால் அரசனிடஞ்சென்று அபயமிட அரசனும் படைகளை யழைத்து குடிகளை யடக்கும்படி யாரம்பித்தான். படைகளுக்கும் சமண முநிவர்களைச் செய்துள்ள பாபச் செயல் தெரிந்து அவர்களது கைகளிலுள்ளக் குண்டாந்தடிகளாலும், அம்புகளாலும் வேஷப்பிராமணர் களையே வதைத்து ஊரைவுட்டும்படிச் செய்துவிட்டார்கள். அரசன் ஆழ்ந்து விசாரிக்காது சமண முநிவர்களைச் செய்தப் பாவச்செயல்களைப் பின்னிட்டுனர்ந்து ஆற்றலற்ற உன்மத்தநிலையையடைந்தான். இவ்வகையாக வேஷப்பிராமணர்கள் யாவரும் தாங்கள் சென்ற யிடங்களில் தங்களது பொய்வேஷங்களையும் போதகங்களையும் சொல்லிக்கொண்டே பிச்சையேற்றுண் ணுங்கால் அவர்கள் வார்த்தைகளே நம்பியக்குடிகள் யாவரையும் தங்கள் வசப்படுத்திகொண்டு தங்கள் சீவனங்களை விருத்தி செய்துக்கொள்ளுவதும், தங்களுக்கு யெதிரடையா யிருந்து தங்கள் பொய்வேஷங்களையும் பொய் போதகங்களையுங் குடிகளுக்குப் பறைகின்றவர்களை தங்களுக்குத் தாழ்ந்தசாதியோ ரென்றுகூறி அவர்களைப் பாழ்படுத்தும் யேதுவிலேயே யிருப்ப தியல்பாம். இவ்வாறு செய்துக்கொண்டே வேஷப்பிராமணர்கள் கங்கைக்கரை யென்னும் வடகாசியை யடைந்தபோது அவ்விடமுள்ளக் குடிகள் யாவரும் புத்தபிரா?ன கங்கை ஆதாரனென்றுங் காசிநாதனென்றும் காசி விசுவேசனென்றுங் கொண்டாடி வருவதுடன் பகவன் ஆதிகங்கத்தை யவ்விடம் நாட்டி ஆதிவேதமாம் முதநூலையும் அதனுட்பொருளாம் உபநிடதங்களையும் மறைவற விளக்கிய சிறப்பும் அதேயிடத்தில்