பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள்- தொகுதி நான்கு 13 I வேஷப் பிராமணர்கள் அவரவர்கள் மனம் போனவாறு கல்வியற்றக்குடி களை வஞ்சித்துப் பொருள் பரிப்பதற்காய யானைமுக விநாயகனை யுண்டுசெய்துக்கொண்டார்கள். யீதன்றி தென்காசிக்குமேல் கார்வேட்டி நகரை யரசாண்டு வந்த பெளத்ததன்ம வரசைெருவனிருந்தான். அவனது மனைவி பூம்பாவையென்னு மோரிராக்கினியு மிருந்தாள். மயிலை புத்தவியார பிச்சையாண்டி வேஷ உற்சாகங்காண வேண்டி வந்து பாம் புகடித்திறக்கவும் சாக்கையர் துக்கங்கொண்டாடி தகன ஞ் செய்யப்பட்ட வளுமவளேயாம். அவளது கணவனுகிய மணிவண்ணனென்னு மரசனே மிக்கவதிரு பமும வல்லமெப்புருடனு மா விருந்ததுடன் ஒர் திடகாத்திரமுள்ள மனிதனுக்கு இரக்கை சூஸ்திரம் ஒன்று செய்து அவன்மீதேறி ஆகாயத்திலுலாவவும், கீழிரங்கவும், அம்பேந்தி யுத்தகளங்களுக்குப் போகவும், சத்துருக்களை ஜெயிக்கவுமாம் கருடவாகனனென்னும் பெயரும் பெற்றிருந்தான். அக்காலத்தில் கார்வெட்டி நகரத்திற்கு வடமேற்கேயுள்ள மலையடி வாரக் குகையில் ஒர் பெரும் மலேசர்ப்ப மிருந்துகொண்டு அருகிற் செல்லும் ஆடு மாடுகளையும் மக்களையும் தனது வலுத்த சுவாசத்தா லிழித்து புசித்துக் கொண்டே வாழ்ந்திருந்தது. இவற்றைக் கண்ணுற்றுவரும் அத்தேச மக்கள் யீதோர் காளிசர்ப்பமென பயந்து அவற்றிற்கு ஆடு மாடுகளைக் கொண்டு போய் விடுத்து மக்களைத் தொடாமலிருக்கப் பூசித்துவருவது வழக்கமாகும். அவ்வகைப் பூசித்தும் அதன் துற்குணம் மாருது ஆடு மாடுகளைப்போல் மக்களையும் புசித்துவந்தபடியால் அத்திக்குநோக்கி ஆடு மாடுகளை மேய்ப்பதும் மக்கள் நடப்பதுமில்லாமற் போய்விட்டது. அதனை யுணர்ந்த மணிவண்ணன் சூஸ்திரகருடனே வரவழைத்து அம்பிராது.ாணியுடன் அதன்மீதேறி மலைசர்ப்பம் வீற்றிருக்குங் குகையை நாடி சென்றபோது அக்காளி சர்ப்பமும் வெளிகிளம்பிற்று. உடனே மேனின்று பாணப்பிரயோகஞ் செய்தபோது சர்ப்பங் குகையினின்று வெளிதோன்றி ஒர் சிறுங்குன் றுருளுவதுபோலுருண்டெழும்பியது. உடனே மணிவண்ணன் சுத்தவீர தைலின் கருடனை விட்டு