பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 3 க. அயோத்திதாஸப் பண்டிதர் சர்ப்பத்தின்மீது பாய்ந்து உடைவாளையுருவி அதன்சிரத்தைப் பிளந்து அதன் மீது நின்ருன். காளிசர்ப்பங் கொல்லப்பட்ட சங்கதியைக் கேழ்விப்பட்ட அத்தேசத்தோர்கள் யாவரும் ஒடி வந்து அரசனைக் கொண்டாடி ஆனந்தக்கூத்தாடினர்கள். அவ்வழியே செல்லுவதற்கு பயந்து வேறு வழி சென்றிருந்தவர்களும், ஆடு மாடுகளை விடுவதற்கு பயந்திருந் தவர்களும் அன்றே ஆனந்தமாக செல்ல வாரம்பித்துக் கொண்டார்கள். மணிவண்ணன் வீரத்தில் வல்லமெயுள்ளவயிைருந்தும் யேழைகளுக் கீவதில் வரையாது கொடுக்கும் வள்ளலாகவும் மிருந்தான். ஜலக்கிரீடையில் எண்ணுயிரம் முல்லைநில ஸ்திரிகளைக் கொண்டுபோய் நீர்விளையாடுவதுடன் அவர்களை யறியாது வஸ்திரங்களைக் கொண்டு போய் புன்னைமரத்திற் கட்டி விட்டு கெஞ்சி விளையாடச் செய்வது மாய லீலா வினுேதகைவு மிருந்தான். மணிவண்ணன் கொண்டல்வண்ணல், கருடவாகனென வழங்கப்பெற்றவன். கிரீடை வல்ல பத்தால் கிரீட்டினன் கிரீட்டி னனென்று மறு பெயரையும்பெற்று சிலநாள் சுகித்திருந்தான். அவனதுயீகையின் குணத்தையும் அன்பின் பெருக்கத்தையுங் கண்ட குடிகள் யாவரும் அவனை மணிவண்ண தெய்வமென்று ங், கொண்டல்வண்ண தெய்வ மென்றும், கருடவாகன தெய்வமென்றும், கிரீட்டின தெய்வமென்றுங் கொண்டாடி வருங்கால் மணிவண்ணனும் மற்றுமுள்ளோரும் அறப்பள்ளியடைந்து ஆனந்தவிசாரிணையிலாழ்ந்துவிட்டார்கள். அவர்களறஹத்து நிலையடைந்த முன்னு று வருடங்களுக்குப்பின் அதே கார்வெட்டி முல்லைநிலத்தில் வந்து சேர்ந்த ஆரிய வேஷப்பிராமணர்களுள் வியாசாச்சாரியென் னப்பட்டவன் தங்களுக்கென்று சில பூமிகளைக் கைப்பற்றி முல்லை நிலத்தோர் வைத்துள்ளப் பாடி யென்னும் பெயரைப் போல் அப் பூமிக்கு வியாசர் பாடி யென்னும் பெயரைக் கொடுத்து சகலராலும் வழங்கச்செய்து அவ்விடமே யாசக சீவனஞ்செய்து வருங்கால் அத்தேச பெளத்தர்கள் மணிவண்ண னென்னுங் கிரீட்டி னனைக் கொண்டாடி வருவதைக் கண்டு