பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு I 3.3 கிரீட்டி ன னென்னும் பெயரை கிருட்டன் கிருஷ்னனென மாற்றி வேருேர் கற்பனையை யுண்டுசெய்து அக்கிருஷ்ணனும் கருடன் மீதேறினன். அக்கிருஷ்ணனும் ஒர் சர்ப்பத்தைக் கொன்ருன். அக்கிருஷ்ணனும் பன்னிராயிரம் ஸ்திரிகளுடன் லீலைபுரிந்து அவர்கள் ஆடைகளை புன்னைமரத்திற் கட்டின னென வரைந்து அத்தேசப் பூர்வ சரித்திரம்போற் காட்டி மேலு மேலுங் கற்பனுகதைகளை வரைந்து தங்களை சிறப்பித்துக்கொண்டார்கள். எவ்வகையா லென்னில்: பெளத்தருக்குள் கர்னராஜன் சரித்திரமொன்று எழுதி வைத்திருந்தார்கள். கர்ணராஜனது யீகையின் மகத்துவத்தையும் அதன்பின் பங்காளிகளுக்குள் பாகவழக்கு நேரிட்டு ஒருவருக் கொருவர் அஸ்திநாதபுறமென்னும் குருவின் கேஷத்திரத்தில் கலகமிட்டுத் தாங்கள் மடிந்தது மன்றி தங்களையடுத்த வரசர்களையும் அவர்களது சந்ததியோர்களையுங் கூட்டி மடித்து விட்டார்கள். அக்கதையை பெளத்த வுபாசகர்கள் குடிகளுக்குப் போதித்து பீகையில் கர்னராஜனைப்போலிருக்க வேண்டிய தான நிலையை விளக்கிவந்தது மன்றி பேராசையால் பெருந்துக்கம் நேரிடுமென்பதை விளக்குவதற்காக பூமியின் பாகவாசையால் சகோதிரர்களுக்குள் நேரிட்ட கலகத்தையும் அதல்ை சகலரும் மடிந்த கோரத்தையும் விளக்கி லோப குணத்தை நீக்கி யீகையைப் பெருக்கும் படி யான வழியில் நிலைக்கச்செய்து வந்தார்கள். அதே கதையை யிவவியாசாச்சாரி பீடமாகக்கொண்டும், பகவன் சைன பர்வதத்தில் எழுதிவைத்திருந்த தசபாரமிதை யென்னும் தச சீலத்தைப் பெயராகக்கொண்டும் இக்கதை வியை கல்ை மலையிலெழுதியிருந்த பாரதமென்றுங் கூறி கர்ணராஜன் சரித்திரத்தையும் அவனது பிறப்பு வளர்ப்பையும் இயற்கைக்கு விரோதமாக கூட்டி யுங் குறைத்தும் எழுதி அக்கதைக்கு ஆதார புருஷன். கிருஷ்ணனென்று வரைந்து கார்வெட்டி நகர் கிரீட்டினன் கதையைக் கால்மாடு தலைமாடாக மாற்றிவிட்டான். கார்வெட்டி நகர் வர சனின் சரித்திரத்தை நன்குனர் ந் துள்ள பெளத்தர்கள் யீதேது புதிய சரித்திரமாகக் கானப் படுகின்றது. பூர்வ சரித்திரத்திற்கும் இதற்கும் மாறுபடுகின்ற