பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்திரர் தேச சரித்திரம் இந்திர மென்னு மொழி ஐந்திரமென்னு மொழியின் திரிபாம். அதாவது, மகதநாட்டுச் சக்கிரவர்த்தித் திருமகன் சித்தார்த்தி சக்கிரவர்த்தியவர்கள் கல்லாலடி யில் வீற்று ஐம்பொறிகளை வென்ற திரத்தால் ஐந்திரரென்று (ஐ-இ) யாகத் திரிந்து இந்திரரென வழங்கி அவரது சங்கத்தோர் நிலைத்த விடங்களுக்கு இந்திர வியாரமென்றும் அவரது உற்சாகங் கொண்டாடுங்காலத்திற்கு இந்திரவிழாநாள், இந்திர விழாக்கோலென்றும், இந்திரவிழாக் கொண்டாடுங் காலங்களி லெல்லாம் மழைப்பெய்வதின் அனுபவங்கண்டு மழைக்குமுன் காட்சியாகும் வானவில்லிற்கு இந்திரதனுசென்றும், அவரை யெக்காலும் சிந்தித்துக் கொண்டாடும் கூட்டத்தோருக்கு இந்தியர்களென்றும், இந்தியர்கள் வாசஞ்செய்யும் தேசத்திற்கு இந்தியமென்றும், இந்திரமென்றும் வழங்கி வந்தார்கள். பூர்வ மித்தேசத்தை பரதகண்டமென்று வழங்கியது முண்டு, காரணமோவென்னில், ஆதியிலித்தேசத்தோர் சித்தார்த்தித் திருமகனை வரதரென்று கொண்டாடி வந்தார்கள். அதாவது, மக்களுக்கு அறவரத்தை யோதியது.கண்டு வரதர், பரதரென்றும், அவர் போதித்துள்ள ஆதிவேதமாம் முதநூலுக்கு “வரதன் பயந்த முதநூலென்றும்”. அவரைக் கொண்டாடிய வித்தேசத்திற்கு வடபரதம் தென்பரத மென்றும் கொண்டாடி வந்தார்கள். இத்தகையக் கொண்டாட்டம் பரதரென்னும் பெயரால் விசேஷமாகக் கொண்டாடாமல் இந்திரரென்னும், பெயரின லேலே விழாக்களையும், வியாரங்களையும், விசேஷமாகக் கொண்டாடி வந்தபடி யால் இத்தேச மக்களை இந்தியர்க ளென்றும், இத்தேசத்தை இந்திய தேசமென்றும் வழங்கி வந்தார்கள். அதுகொண்டு வடயிந்தியமென்றும், தென்னிந்திய மென்றும் பிரபலப் பெயருண்டாயிற்று.