பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 3-4 க. அயோத்திதாளலப் பண்டிதர் தேயென்று கூறுவார்களாயின் வியாசாச்சாரி யவர்களுக்கு யாது மாறுத்திரங் கூறிவந்தானென்னில் அவரைப்போன்றே யிவரோர் அவதாரமாக வந்தவர் அவரை ப்போன்ற அவதாரமாக வந்தபடியால் சில சரித்திரங்கள் மாறுபட்டிருப் பினும் சிலது பொருந்தியே யிருக்குமென்று விவேகிகளுக்கு விடையளித்துவிட்டு கல்வியற்றக் குடிகளுக்குங் காமியமுற்ற சிற்றரசர்களுக்கும் பெளத்தமார்க்க மணிவண்ணன், பெளத்தமார்க்க கருடவாகனன், பெளத்தமார்க்கக் கிரீட்டின னெக் கூறி முல்லைநில வாசிகளாம் இடையர்கள் யாவரையுந் தங்கள் வசப்படுத்திக்கொண்டு பால், தயிர், மோர், நெய் முதலியவைகளை இலவசமாகப்பெற்று சீவிக்கவாரம்பித்துக் கொண்டார்கள். இதன் காரணமோ வென்னில், ஆரிய வேஷப் பிராமணர்கள் இத்தேசம் வந்து குடியேறிய பின்னர் பெளத்தர்கள் முன்னிலையில் மிருகாதிகளின் புலா லைப் புசிப்பதற்கு பயந்து கொண்டு மாடுகளையுங் குதிரைகளையும் நெருப்பிலிட்டு யாகம் யாகமெனச் சுட்டுத்தின்றுகொண்டே வந்தபடியால் இவர்களைக்காணும் பெளத்தர்கள் யாவரும் புலால் புசிக்கும் மிலேச்சர் மிலேச்சரெனக்கூறி துறத்திக்கொண்டே யிருந்தபடி யால் சகலருங்கான புலால் புசிப்பதைவிடுத்து மறைவில் புசித்துக்கொண்டு முல்லைநிலவாசிகளுக்குக் கிரீட்டினன் கதையை மிக்க வர்ணனையாகக் கூறி இக்கிரீட்டி னன் உங்கட்குலத்தில் அவதாரப்புருஷகைத் தோன்றி பூமிபாரந் தீர்த்தவர் இக்கதையோ மிக்கப் புண்ணியகதை இதனை மிக்க பயபக்தியுடன் கேட்பவர்கள் யாரோ அவர்கள் யாவரும் மேலாய பதவியை அடைவீர்களென்று கூறி முல்லைநிலை வாசிகள் யாவரையும் அக்கதையைப் புண்ணியக் கதையென்று கேட்கும்படிச்செய்து பொருள் பரிப்பதுடன் பால் தயிர் நெய் முதலியவற்றையும் இலவசமாகப்பெற்று சுகிக்கவாரம்பித்து கர்ணராஜன் கதையில் எங்கெங்கு கிரீட்டினன் கதையை சிறப்பிக்கவேண்டுமோ அங்கங்கு மிக்க சிறப்பித்து அவரோர் அநாதார புருஷன் அவரோ பூமி பாரந் தீர்த்தவர் முல்லைநிலகோபிகா ஸ்திரீகளுடன் விளையாடினவர் இவரே மகாதேவன் இவரது சரித்திரத்தை கேட்போர் யாவரும் புண்ணிய பலனை யடைவீர்களென்று முல்லைநிலமெங்கணு