பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 135 மிக்கதையைப் பரவச்செய்து தென்காசிமக்களை மருட்டிவிட்டது மன்றி வடகாசிக்குச்சென்று கர்ணராஜன் கதையைக்கொண்டு சீவிக்குமிடத்தில் அவர்களு மக்கதையை அங்கீகரித்துக் கொள்ளுவதற்காய் புத்தரே கிருஷ்ணன், கிருஷ்ணனே புத்தர், கிருஷ்ண அவதாரமாக வந்தவர். அவரது கதையைக் கேட்போர் புண்ணியப்பலனைப் பெருவரென்று கூறி கல்லினல் நெருப்பிற் தீய்ந்த முகமும் தீய்ந்த காலு ங் கையும்போலடித்து ஒர் விக்கினவுருவொன்று செய்து ஒர் நூதனக்கட்டிடத்தில் வைத்து இவர்தானக்கிரீட்டிணன் இவரை நெருப்பிட்டுச் சுட்டும் இத்தேகம் அழியாமலிருந்த இவர்தான் ஜகநாதன் விட்டோ வெண்ணுங் கல்லுருக்கொண்டுள்ள படி யால் இவரே விட்டுனு இவரே விஷ்ணு அவதார புருஷகை வந்தவரென மருட்டி வஞ்சித்து சரித்திரந் தெரிந்த பெளத்தர்களையும் சம்ன முனிவர்களையும் மயக்குதற் கியலாவிடினுங் கல்வியற்றக் குடிகளை வயப்படுத்திக் கொண்டார்கள். அத்தகைய வனுபவப்பட்டுள்ளபோதினும் காசியரசனும் ஒன்பதியிைரம் சமண முநிவர்களும் வயப்படாமல் பிராமணர்களே விரட்டித் துரத்தவும் அவர்களது பொய் வேஷங்களைப் பகருவதுமாயிருந்தார்கள். தென்காசிக்கு வடமேற்குதிக்கில் குடியேறியிருந்த ஆரியவேஷ பிராமணர்களுள் இராமாநுடாச்சாரியென்பவன் வடகாசியி லமைத்துள்ள விட்டுணு வென்னுங்கற்சிலை தெய்வாதாரத்தைக்கொண்டு புத்தரது சரித்திரத்தை யநுசரித்த ஒர் கூட்டத்தை யேற்படுத்தி அதல்ை சீவிக்க வாரம் பித்துக்கொண்டான். அவை யாதெனில், புத்தபிரான் கமலபாதம் இரத்திதீவகற்பாரையில் பதிந்துள்ளதை சந்தனத் தாலும் மெழுகினலும் பதித்துவந்து சங்கங்களில் வைத்து பூசிப்பதுடன் புத்தரது சத்தியசங்கத்தையும் புத்தரது தன்மச் சக்கரத்தையும் சிந்தித்து நீதிவழுவா நிலையில் நின்றெழுகும் பெளத்தர்களது செயலினை யறிந்துவந்த இராமா நுடாச்சாரி புத்தபிரான் பாதப்படியை விட்டுணு பாதப்படியென மாற்றி தாமரை புட்பத்திலிருப்பதுபோல் வரைந்து சிந்தாவிளக் கென்னும் அம்மனின் சோதியை மத்தியில் வரைந்து சத்திய சங்கத்தை சங்குபோல் வரைந்து தன்மச்சக்கரத்தை சக்கரம்