பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4 3 க. அயோத்திதாளலப் பண்டிதர் வதைத்துவருங்கால் இவர்கள் செய்துவந்த பூர்வ புண்ணிய வசத்தால் மேல்நாட்டு ஐரோப்பிய விவேகக்கூட்டத்தோர் வந்து தோன்றினர்கள். அவ்வகை வந்து தோன்றியவர்களுக்குள் சிலர் வியாபார விசாரினையிலும், இராஜீய விசாரிணையிலு மிருந்தபோதிலும் சிலர் வடகாசியில் வழங்கிவந்த வேதம் வேதமென்னு மொழியிலேயே ஆக்கமுடையவர்களாகி அதன் ஆராய்ச்சியிலி ருந்தார்கள். காரணமோவென்னில் புத்தபிரான் ஆதிசங்கத்தை நாட்டியதுங்காசி, சமண முநிவர்களை நிறப்பியதுங்காசி, ஆதிவேதமொழிகளாம் திரிபீடவாக்கியங்களை பரவச் செய்ததுங் காசி, அம்மூவருமொழிகளாம் பேதவாக்கியத்தின் அந்தரார்த்த உபநிடதங்களை விளக்கியதுங் காசி, அவர் பரிநிருவான முற்றதுங் காசியாதலின் அங்குள்ள மக்களும் கங்கைபாதாரனம் காசி நாதன் வியாரத்தை தரிசிக்கவரு மக்களும் திரிபேத வாக்கியங்களையே சிரமேற்கொண்டேந்து மொழியைக் கேட்கும் ஐரோப்பிய விவேகிகள் வேதமென்பதென்ன வஃதெங்குளது அதன் பொருளென்னையென விசாரிக்க வாரம்பித்துக்கொண்டார்கள். அக்காலத்திலும் பெளத்ததன்ம விவேகிக ளோருவரும் ஐரோப்பியர்களிடம் நெருங்காது வேஷப்பிராமணர்களே முன்சென்று வேணசங்கதிகளைக் கூறவும் தேசசங்கதிகளை விளக்கவுமுடையவர்களாயிருந்ததுடன் மகமதியர்கள் வந்து குடியேறியபோதே அவர்களது உதவிகொண்டு ந் தங்கள் கெட்ட யெண்ணங்களில்ை காசியிலுள்ள ப் பெருங் கட்டிடங்கள் யாவையுந்தகர்த்து புத்தரைப்போன்ற சிலைகள் யாவையும் அப்புறப்படுத்தியும் மண்களிற் புதைத்தும் தங்களெண்னம்போற் செய்துக்கொண்ட விக்கிரகங்களை வைத்துக்கொண்டும் தாங்களே இத்தேசத்துப் பூர்வக்குடிகள் போலபிநயித்து பெளத்தர்களை யவர்களிடம் பேசவிடாமலும் நெருங்கவிடாமலும் செய்துகொண்டிருந்த காலத்தில் இந்திரரை சிந்திக்கும் இந்திரதேசக் குடிகளை இந்தியரென்று வழங்கிவந்தப் பெயரை மாற்றி மகமதியர்களால் “இந்து லோகா” வென வழங்கி நாளுக்குநாள் இந்து இந்துவென வழங்கிகொண்டே வந்துவிட்டார்கள். அவ்வழக்க மொழியைக்கேட்டு வந்த