பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 4-4 க. அயோத்திதாளலப் பண்டிதர் விளக்குமாறு வேதமொழிகளின் உபநிட்சயார்த்தமென்னும் உபநிடதமென வரைந்துள்ள அந்தரார்த்தத்தை யறியாமலும் வேதமென்னு மொழியை பெரியக் கட்டு புத்தகமென் றெண்ணி முதல் வேதத்திலுள்ளது புத்தகங்கள் பத்தென்றும், காண்டங்கள் இருபதென்றும், வாக்கியங்கள் ஆருயிரத்திப் பதினைந்தென்றும், அதுவாகங்கள் நூத்தியெட்டென்றும் சூக்கதங்கள் எழுநூற்றி யறுபதுக்கு மேற்பட்ட தென்றும், பிரபாதங்கொண்டது நார்ப்பதென்றும் முதல் வேதமென்பதுள் வரைந்துள்ளது போலவே மற்ற மூன்றுவேத மென்பதையும் பெருங்கட்டுகளாக வரைந்துவிட்டார்கள். இவ்வகை வரைந்துள்ள வேதங்களை கடவுள் பிரம்மாவுக்குப் போதித்தாரென்றும் பிரம்மா முனிவர்களுக்குப் போதித்தாரென்றும் ஒர்புறங் காணலாம். சிற்சில வரசர்களே வேதங்களெழுதினர்களென்பதை மற்ருேர் புறங் காணலாம். பிரஜாபதியாலும், சந்திரனலும் அக்கினியாலும் வேதங்க ளெழுதப்பட்ட தென்பதை இன்னேர் புறத்திற் காணலாம். அதர்வணன் பிள்ளை யெழுதினன் தேவர்களெல்லோரு மெழுதினர்களென்பதை வேருேர் புறத்திற் காணலாம். இவ்வகை மாறுதலாக யின்னர்தான் அப்பெருங்கட்டாகிய வேதத்தை யெழுதியவர்களென்பது புலப்படாமலி ருப்பதற்குக் காரணம் அவரவர்கள் மனம்போனவாறு பலரும் எழுதி பல துரைகளிடம் வேதம் வேதமென வரைந்துக்கொண்டுபோய்க் கொடுத்துள்ளதாதலின் அவர்கள் வேதத்தின் ஆக்கியோன் யின்னனேயென்று ரூ பிக்கப்பாங்கில்லாமல் போய்விட்டது. இவ்வேதத்தின் ஆக்கியோன் யில்லாதபடியால்தான் அசுரன் திருடி கொண்டுபோய் சமுத்திரத்தில் ஒளித்துவைத்த வேதத்தை யின்னெரு கடவுள் அதிகப் பிரயாசையுடன் மச்சாவதாரமெடுத்து சமுத்திரத்திற் சென்று கொண்டு வந்திருக்கின்ருர். ஆக்கியோன் வொருவரிருந்திருப்பாராயின் உடனுக்குடன் வேருெருவேதக்கட்டை யெழுதிக்கொடுத்து விட்டிருப்பார். மட்சாவதாரம் வேண்டி யிருக்காது. அசுரனுடன் போர்புரியும் அவசரமுமிராது. அவ்வேதத்துள் எழுதிவைத்துள்ள சங்கதி யாவும் அக்னியையே தெய்வமாகத் தொழுவுங் கூட்டத்தோர்