பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு I -17 பெயர்களிலும், ஞானங்களிலும் சிலவற்றைக் கூட்டி யுங் குறைத்தும் நாலைந்து பேர் தங்கடங்கள் மனம்போனவாறு எழுதிக்கொண்டு போய் கனந்தங்கிய துரை மக்களிடங் கொடுத்து இவைகள்தான் வேதவாக்கியம் இவைகள்தான் சுருதி வாக்கியமெனக் கொடுத்து அதலுைம் பொருள் சம்பாதிக்க வாரம்பித்துக்கொண்டார்கள். இத்தியாதி விஷயங்களையும் ஆரிய வேஷ ப் பிராமணர்களே வரைந்து காலத்திற்குக் காலங் கடந்துவந்த துரை மக்களுக்கு எழுதிக்கொண்டு போய் கொடுத்திருந்த போதினும் அவ்வேதத்தை சிக்கருத்து சீர்திருத்தியவர் வியாசரேயெனத் தங்கள் மரபினர் பெயரையே சிறப்பித் தெழுதிக்கொண்டார்கள். காரணமோவென்னில் தங்களுக் கெதிரியாக வேஷமிட்டுள்ள மராஷ்டக வேஷப்பிராமணர் களேனும், திராவிட வேஷப்பிராமணர்களேனும், கன்னட வேஷப்பிராமணர்களேனும் தங்களுடையதென வலுபெறச் செய்துக்கொள்ளுவார்களென்னும் பீதியால் வேதத்தை சிக்கறுத்தவரும் வியாசர், புராணங்களை யெழுதியவரும், வியாசர், பாரதக்கதையை வரைந்தவரும் வியாசர், சங்காரச் சாரிக்கு குருவாகவந்தவரும் வியாசரென வரைந்துவைத்துக் கொண்டு தங்கள் சுய காரிய விருத்திகளைச் செய்து வந்த ப்ோதிலும் மற்றுமுள்ள வேஷப் பிராமணர்கள் தங்கங் டங் களுக்குள் பெண் கொடுக்கல் வாங்கல் புசிப்பு முதலியவைக ளற்றிருப்பினும் சுய காரிய சீவனங்களுள் ஆரிய வேஷ ப் பிராமணர்களை யடுத்தே நடத்திக்கொண்டார்கள். சமணமுநிவர்களால் மதுமக்களுள் அவர்கள் தொழில் களுக்குத் தக்கவாறும், செயல்களுக்குத் தக்கவாறும், குணங்களுக்குத் தக்கவாறுங் கொடுத்திருந்தப் பெயர்களை ஒற்று மெய்க்கேடாம் அறிவிலிப்பிரிவினை களுண்டு செய்து அதிற்றங்களை உயர்ந்தசாதிப் பிராமணர்களென வகுத்துக் கொண்டு தங்களுக்கு யெதிரிகளாக விருந்து தங்கள் வேஷங்களையும், பொய்ப்போதங்களையும் சகலக்குடிகளுக்கும் பறைந்து, அடித்துத்துரத்தி சானந்துளிர்க்கச் செய்துவந்த பெளத்த வுபாசகர்களாம் மேன்மக்களை சண்டாளரென்றும், தீயரென்றும், பறையரென்று மிழிவுகூறி சொல்லிவந்த சங்கதிகளை மகமதிய வரசர்களுங்குடிகளுங் கேட்டு ங்