பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு I 5.3 அவ்வகை யெழுதியுள்ள சட்ட திட்டங்களை ஒருவருஞ் சட்டை செய்யாது தங்கடங்கள் மனம்போனவாறு ஐயரென்றும், அய்யங்காரென்றும், பட்டரென்றும், ராவென்றும், சிங் கென்றும், நாயுடென்றும் முதலியென்றும், ரெட்டி யென்றும், செட்டி யென்றும், வெவ்வேறு தொடர்மொழிகளை சேர்த்துக் கொண்டார்கள். இத்தகையப் பெயர்களை சேர்த்துக் கொண்டதற்கு இவர்களுக்கோ ராதாரமுங் கிடையாது. நான்கு வருணசிரமத்திற்கும் நாங்கள் வைத்துள்ள பெயர்களை வையாது நீங்கள் வெவ்வேறு பெயர்களை வைக்கலாமோ வென்று கேட்பதற்கு அம்மனுதன் மசாஸ்திரத்திற்கும் அதன் தலைவர் களுக்கும் அதிகாரங் கிடையாது. கொழுத்தப் பசுக்களை நெருப்பிலிட்டுச் சுட்டு யெதேஷ் டமாகத்தின்பதற்கு பிரம்மாவானவர் பசுக்களை எக்கியத்திற்கே சிருஷ்டித்திருக்கின்ருரென்று இம்மதுநூலி லெழுதி வைத்துக் கொண்டவர்கள் பெளத்தர்களது தேசத்தில் பசு வைக்கொல்லும் எக்கியத்தொழிலை மறந்தே விட்டுவிட்டார் இவர்களெழுதியுள்ள படி பிரம்மாவானவர் எக்கியத்திற் கென்றே பசுக்களை சிருஷ்டித்துள்ளது யெதார்த்தமாயின் இவர்களும் விட்டிருப் பார்களோ. பிரம்மசிருட்டி கருத்தும் பழுதாமோ, இல்லை. தங்கள் புசிப்பின் பிரியத்தை பிரமன் மீதேற்றி வரைந்து வைத்துக் கொண்டபோதினும் கொன்றுத் தின்ன மெயாகும் பெளத்தர்களது மத்தியில் அந்நோர் பிரமத்தின் கருத்தும் அடியோடழிந்து போய்விட்டது. பல பாஷை யோருள்ளும் பல தேசத்தோருள்ளும் பல மதத்தோருள்ளும் வேஷ ப் பிராமணர்கள் தோன்றிவிட்ட படி யால் அவரவர்கள் மனம்போ லெழுதிக்கொண்ட வேதங்களும், மனம்போலெழுதிக்கொண்ட வேதாந்தங்களும் மனம் போலெழுதிக்கொண்ட புராணங்களும், மனம்போலெ ழுதிக் கொண்ட தன்மங்களும், மனம்போலெழுதிக்கொண்ட கடவுளர்களும் ஒருவருக்கொருவ ரொவ்வாது மாறுபட்டுள்ள படி யால் ஒருவகுப்பா ரெழுதிக்கொண்ட கட்டளைகள் மறு வகுப் பாருக் கொவ்வாமலும், ஒருவகுப் பார் தெய்வம் மறு வகுப்பாருக் கொவ்வாமலும் கலகங்களுண்டாகி வேறு படுவதுடன் நூதனமாக யேற்படுத்திக்கொண்ட மதுதன்ம