பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 1 5.5 தொடர்மொழிகளைச் சேர்த்துக்கொண்டு தங்கடங்கள் மனம்போல் பெரியசாதிக ளென்னும் பெயர்களை மதுதன்ம சாஸ்திரத்திற் கொவ்வாமலே வைத்துவருகின்ருர்கள். அவைகள் யாவும் சாதித்தலைவர்களுக் கவசியமில்லை. சாதித்தலைவர்களது போதனைப்படி தங்கள் சாதிக்கட்டு க் குளடங்கி இந்துக்களேன் போர்க் குட்பட்ட எந்தசாமிகளைத் தொழுதுக் கொண்டாலு ஞ்சரி, எச்சாதித்தொடர்மொழி களைச்சேர்த்துக் கொண்டாலுஞ்சரி, தங்களுக்கு மட்டிலு மடங்கி தங்களை பிரம்மா முகத்திலிருந்து வந்தவர்களென் ருெடிங்கி, தங்களையே பிரம்ம சாமியென் றுவனங்கி, அமாவாசை தட்சனை,கிரஹண தட்சனை, நோம்பு தட்சனை, உபநயன தட்சனை, பூசாரி தட்சனை, புண்ணியதான தட்சனை, சங்கருந்தி தட்சனை, சாவுதோஷ தட்சனை, பிள்ளை பிறந்த தட்சனை முதலியவைகளைக் கொடுத்துக் கொண்டே வந்தால் போதும் மற்றப்படி அந்தசாதி இந்தசாதியை வைத்துக்கொண்டு பிள்ளை பெற்ருல் அநுலோமம் பார்க்கவேண்டியதில்லை. இந்த சாதி அந்தசாதியை வைத்துக்கொண்டு பிள்ளைபெற்ருல் பிரிதிலோமம் பார்க்கவேண்டியதில்லை. அவர்கள் வரைந்துக் கொண்டு ஸ்ள மநுதன்ம சாஸ்திரத்தில் மட்டி லுங் காணலாமேயன்றி அநுபவத்தில் ஒன்றுங் கிடையவே கிடையா. அதன் காரணமோவென்னில் அவரவர்கள் மனம்போல் சாஸ்திரங்களெழுதிக்கொள்ளுவதும், அவரவர்கள் மனம்போல் சாதிப்பெய ரேற்படுத்திக் கொள்ளுவதும், அவரவர்கள் மனம்போல் சாதித்தொடர் மொழிகளை சேர்த்துக்கொள்ளுவது மாய செயலை யுடையவர்களாதலின் சாஸ்திரத்திற்கொற்ற அநுபவமும், அநுபவத்திற்கொற்ற சாஸ்திரங்களும் அவர்களிடங் கிடையாவாம். இவற்றிற்குப் பகரமாய் “யாரடா விட்டது மானியமென நான்தான் விட்டுக்கொண்டேன்” என்னும் பழமொழிக்கொக்க அவனவன் மனம்போனவாறு ஒவ்வோர் சாதிப்பெயர்களை வைத்துக் கொண்டபடியால் அப்பெயரை அவனேசொன்னல் தான் வெளியோருக்குத் தெரியும், அதைக் கண்டே இத்தேசத்தோருக்குள் நீவிரென்னசாதி யென்றுவினவுவதும் அதற்கவன் வைத்துக்கொண்ட சாதிப்பெயரை ப் பகருவதும்