பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 56 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் வழக்கமாம். அவனவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சாதிப்பெயர்களை அவனவன் சொன்னலே தெரியுமன்றி சொல்லாதபோது தெரியாது. வீதியில் மாடு போகிறது, குதிரை போகிறது, கழுதை போகிறது, நாய் போகிறது, மனிதர்கள் போ கின்ருர்களென்று கூறலாம். மற்றப்படி அவனவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சாதிப்பெயர்களை அவனவனைக் கேட்டே தெரிந்துக்கொள்ள வேண்டி யது அவசியமாகும். அவனவன் பிரியத்திற்கும் மதுதன் ம சாஸ்திரத்திற்கும் யாதொரு சம்மந்தமுங்கிடையா. புருசீக தேசத்தினின்று வந்து குடியேறிய ஆரியர்களும், இத்தேசத்திலிருந்த ஆந்திர, கன்னட, மராஷ்டக, திராவிட, வங்காள, காம்போஜர்களும், பெளத்ததன்ம அந்தணர்களைப் போல் பிராமண வேஷ மணிந்து அவ்வேஷங்களுக்கு ஆதரவான வேதங்களையும், புராணங்களையும், ஸ்மிருதிகளையும், அதிற் கீழ்ச்சாதி மேற்சாதி யென்னும் ஆசாரங்களையும், சிலாலயப் பூசைகளையும், அவரவர்கள் மனம்போ லேற்படுத்திக் கொண்டு மதக்கடை பரப்பி சீவிக்குங்கால் இவர்களது பொய் வேதங்களையும், பொய்க்குருவுப தேசங்களையும், சமண முநிவர்களாகும் பாம்பாட்டி சித்தர் முதலியோர் கண்டித்தும் இவர்களது பொய்ச்சாதி வேஷங்களையும் பொய் லிங்க பூசைகளையும் சிலாலிங்கத் தொழுகைகளையும், சமணமுநிவர் களாம் சிவவாக்கியர், பட்டி னத்தார், தாயுமானவர், சாம்பவனர், கடுவெளி சித்தர், அகப்பே சித்தர், இடைகாட்டு சித்தர், குதும்பை சித்தர், மற்றுமுள்ள மகாஞானிகளாலுங் கண்டித்து அனந்தநூற்க ளெழுதியது மன்றி பெளத்த தாயகர்களாம் விவேகிகளால் வேஷப்பிராமணர்களைக் காணுமிடங்களி லெல்லாம் தங்கவிடாமலடித்துத்துரத்தவும் பெளத்தர்கள் வாசஞ்செய்யும் சேரிகளுக்குள்ளும் கிருமங்களுக்குள்ளும் வந்து நுழைந்துவிடுவார்களானல் கிருமத்திற்கும் சேரிக்கும் யேதேனும் தீங்குண்டாமென்று பயந்து அவர்களை யடித்துத் துரத்தி அவர்கள் நடந்தவழியே சாணத்தைக் கரைத்து துளிர்த்துக்கொண்டேபோய் சானச்சட்டியை அவர்கள் மீதே யுடைத்துவருவதுமாகிய வழக்கத்திலிருந்தார்கள்.