பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் கீழ் மக்களாம் பறையர்களெனத் தாழ்த்தி நிலைகுலைக்கும் நோக்கத்திலேயே விருந்துவிட்டார்கள். எத்தகைய நிலைகுலைவென்னில் மடங்களிற் றங்கியிருந்த சமணமுநிவர்களை அவ்விடங்களிலிருந்தோட்டுவதும், அந்தந்த மடங்களிற் சிறுவர்கள் வாசிப்புக்கென்று ஏற்படுத்தியிருந்த பள்ளிக்கூடங்களைக் கலைத்தும், தங்களது போதனைக்குட்பட்ட வரசர்களை விடுத்தும், தங்களது பொய்ப்போதனைகளுக்கு மயங்கா விவேக வரசர்களை மித்திரபேதங்களாற் கொன்றும் தேசங்களை விட்டோட்டியும் புத்ததன்மங்களை மாறுபடுத்திக் கொண்டு வந்ததுமன்றி அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளருக்குங் கன்ம குருக்களாகவிருந்து தன் மகன்மக் கிரியைகளை நடாத்திவந்த சாக்கையர், வள்ளுவர் நிமித்தகர்களென்போர்களை வள்ளுவப் பறையர்களெனத் தாழ்த்தி அரசர், வணிகர், வேளாளரென்னும் முத்தொழிலா ளருக்கும் செய்துவந்தக் கன்மக்கிரியைகளை செய்யவிடாதகற்றி வேஷப் பிராமணர்களே அக்கிரியைகளை நடாத்துவதற் காரம்பித்துக் கொண்டதுமன்றி கல்வியற்ற வரசர்களிடத்தும், வணிகர்களிடத்தும், வேளாளர்களிடத்தும், வள்ளுவர்களைப் பறையர்களென்று கூறி யிழிவுபடுத்தியது மன்றி அருகில் நெறுங்கவிடாமலுஞ் செய்து அவர்களது தன் மகன் மக்கிரியைகளைத் தாங்களே யநுபவித்துக் கொண்டதுமன்றி அவர்களை எங்குந் தலையெடுக்கவிடாமல் செய்து மற்றும் யாது விஷயத்திலும் சீவிக்கவிடாது தாழ்த்தி நிலைகுலையச் செய்து உளருக்குள் பிரவேசிக்கவிடாமலும், சுத்தநீர்களைமொண்டு குடிக்கவிடாமலும், வண்ணுர்களை வஸ்திர மெடுக்கவிடா மலும், அம்பட்டர்களே சவரஞ்செய்யவிடாமலும் மற்றுங் கனவான்களாயுள்ளக் குடிகள் வாசஞ்செய்யும் வீதிகளிற் போகவிடாமலும், அவர்களிடம் நெறுங்கிப் பேசவிடாமலும் தடுத்துப் பலவகையாலும் பெளத்த குருக்களையும் பெளத்த வு பாசகர்களையுமே கொல்லத்தக்க யேதுக்களைத் தேடிக்கொண்டு தங்கள் பொய்வேதங்களையும், பொய்வேதாந் தங்களையும் பொய்ப்புராணங்களையும், பொய் ஸ்மிருதிகளையும் சிலாலயங்களாம் பொய் மதக்கடைகளையும் பரப்பி பொய்க் குருக்களாகிய வேஷப்பிராமணர்கள் யாவரும் மெய்க்குருக்கள்