பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு I 59 போல் நடித்து கல்வியற்ற குடி களையுங் காமிய முற்ற சிற்றரசர்களையும் வசப்படுத்திக்கொண்டு பெளத்ததன் மத்தில் பிரழாது சுத்தசிலத்திலிருப்பவர்கள் யாரையுந் தாழ்ந்தசாதிக ளென்று கூறி எவ்வெவ்வகையில் எவ்வெவ்வரிடத்தும் தாழ்ச்சிபெறக்கூறி நசிக்கக்கூடுமோ அவர்கள் யாவரையுந் தங்கள் வயப்படுத்திக்கொண்டு பெளத்த சிகாமணிகளாம் மேன்மக்கள் யாவரையுங் கீழ்மக்களெனத் தாழ்த்தி எங்கும் எவ்விதத்திலும் எச்சீவனங்களிலும் நெறுங்கவிடாமல் துரத்தி நசித்துக்கொண்டே வந்தார்கள். பெளத்த தரயக மேன்மக்களோ வென்னில் சாதிபேதங் களாலுண்டாங் கேடுகளை விளக்கியவைகளைக் கண்டித்தும், மதபேதங்களையும் அதன் கேடுகளையும் விளக்கி அவைகளைக் கண்டித்தும் வேண்டியப் பாடல்களைப் பாடி நீதிமார்க்கங்களைப் பறைந்திருக்கின்ருர்கள். ஆரிய மிலேச்சர்களோ கொண்டிருப்பது பிராமன வேஷம், போர்த்திருப்பது பொருமெய்ப்போர்வை, உள்ளத் துரைந்திருப்பதோ வஞ்சினக்கூற்று, நாவுரையோ நஞ்சுண்டவாள், குடி கெடுப்பே குணசிந்தை யுள்ளவர்களா தலின் பெளத்த சிகாமணிகளின் நீதிபோதங்களைத் தங்கட் செவிகளிற்கேளாது தங்களது பொய்க் கட்டுப்பாடுகளாம் சாதியே தங்களுக்கும் பொய் மத பேதங்களுக்கும் உட்படாத வர்கள் யாரையுந் தாழ்ந்தசாதிகளென வகுத்து நிலைகுலையச் செய்தற்கு பறையனென்னும் பெயரையும், சண்டாளனென்னும் பெயரையும், தீயரென்னும் பெயரையும் பல்வகையாலும் பரவச் செய்து வந்ததுமன்றி அன்னிய தேசங்களிலிருந்து இவ்விடம் வந்து, குடியேறியவர்களுக்கும் இழிவாக போதித்து அவர்களாலுந்தாழ்ச்சியடையச் செய்தும் இப்பறையனென்னும் பெயரைப் பட்சிகளுக்கும், மிருகங்களுக்குங் கொடுத்துப் பரவச்செய்து இப்பறையனென்னும் பெயரை அரிச்சந்திர னென்னும் பொய்க்கதையிலும், நந்தன் சரித்திரமென்னும் பொய்க்கதையிலும், கபிலர் அகவலென்னும் பொய்க் கதையிலும் பரவச்செய்து கல்வியற்ற சாதிபேதமுள்ளோர் சகலர் நாவிலும் இழிவுபெற வழங்கவைத்துவிட்டார்கள். இவ்விழி பெயரால் பள்ளிக்கூட சிறுவர்களும் நான