பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 க. அயோத்திதாளலப் பண்டிதர் தொல்காப்பியம் மயங்கா மரபினெழுத்து முறைகாட்டி மங்குநீர் வரைப்பி னேந்திரர். சிலப்பதிகாரம் கண்களி மயக்கத்துக் காதலோடிருந்த தண்டமிழாசான் சாத்தானிஃதுரைக்கு பதஞ்சலியார் ஞானம் வசனசக்தி கபிலாதி மாமுனிவர் மகிதான ஜனகாதியும் வாமரோமமுனிநந்திதேவன் வடபாஷையோதினர்கள் வண்மெயே மேருலாவுவட வீதிதோருமுயர் வேதஞான ஜனகாதியர் மேலைவீதிதிரு மூலவர்க்கமிக வேயிருந்து விளையாடினர் பாருங்கீழ்திசையிலேயர் சட்டமுனி பானுமா மலையிலாகினர் பன்னு தென்றிசையிலேயிருந்து தமிழ் பாஷையோதினன் அகத்தியன் அவற்றை விடாமுயற்சியில் அநுசரித்துவந்த சங்கத்தோர் கள் தென்னிந்திர தேசம் வடயிந்திர தேசமெங்கும் உள்ள சங்கத்தோர்களுக்கு சகட பாஷையாம் சமஸ்கிருதத்தையும், திராவிட பாஷையாம் தமிழையும் கற்பித்து அவ்விரு பாஷை களில் திரிபேத வாக்கியங்களாம் திரிபீட வாக்கியங்களையும், அதன் உப நிட்சயார்த்தங்களாம் உபநிடதங்களையும் வரைந்து உலகமதுக்கள் கல்விகற்று அறிவின் விருத்தி பெருவதற்காகக் கலைநூற்களை மக்கள் ரோகங்களைப் போக்கும் ஒடதிகளின் குண குணங்களை யறிந்து பரிகரிப்பதற்கு சரகசூசரக மாம் வைத்திய நூற்களை வரைந்தும், மக்கள் கால மாறுதல்களையும் அதன் குணுகுணங்களையு மறிந்து பூமிகளை சீர்திருத்திப் பலனடைவதற்கு அந்தந்த சோதிகளின் நிலையங்களை யறிந்துக்கொள்ளுவதற்காக சோதிடநுாற்களே வரைந்தும் வைத்ததுமன்றி மக்கள் பூமிகளின் குணுகுணங்களை யறிந்து ஆகார சீர்திருத்தங்களையும், தேக போஷனைகளையுங் கண்டறிந்து சுகம்பெருவதற்கு கடற்கரைகளைச் சார்ந்த நிலங்களை நெய்த நிலமென்றும், நாடுகளைச் சார்ந்த நிலங்களை மருத நிலமென்றும், காடுகளைச் சார்ந்த நிலங்களை முல்லை நிலமென்றும், மலைகளைச்சார்ந்த நிலங்களை குறிஞ்சி