பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு I 9 நிலமென்றும், படு நிலங்களை பாலைநிலங்களென்றும் வகுத்து அந்தந்த நிலங்களில் விளையக்கூடியப் பொருட்கள் இன்னின்ன வைகளென்றும், அப்பொருட்கள் இன்னின்னவைகளுக்கு வுபயோகமுள்ளதென்றும் விளக்கி ஐந்து வகை பூமிகளின் பலன்களை யடைவோர் ஒருவருக்கொருவர் அவரவர் பூமிகளுக்கு நீர்ப்பாய்ச்சும் வசதி சூத்திரங்களையும், அதற்குரியக் கருவி சூத்திரங்களையும் கண்டு பிடித்து தங்கட் கைகளையும் கால்களையும் ஒரியந்திர சூத்திரம்போற் கொண்டு தொழில் புரிவோர்களுக்கு வடமொழியில் சூத்திரர் சூஸ்திரரென் றழைக்கப் பெற்ருர்கள். இத்தகைய பூமிகளை யுழுது பண்படுத்தி தானிய விருத்திசெய்து சருவ சீவர்கள் புசிப்பிக்கும், வேள்வியின் விருத்திக்கும் ஆதார பூதமாக விளங்கிைேர்கள் தென்மொழியில் வெளாளர்களென்றும் பூவாளர்களென்றும் அழைக்கப் பெற்ருர்கள். இவர்களுள் காடுகளைச்சார்ந்த முல்லை நிலவாசிக்ள் தங்களால் வளர்க்கப்பட்ட ஆடு மாடுகளினின்று கிடைக்கும் பால், தயிர், நெய், மோரிவைகளைக் கொண்டு போய் மருதநிலவாசிகளிடம் கொடுத்து தானியம் பெற்றுக்கொள்ளு கிறதும், மருதநிலத்தோர் தங்கள் தானியங்களை கொண்டு போய் முல்லை நிலத்தாருக்குக் கொடுத்து நெய், தயிர், பால் பெற்றுக் கொள்ளுகிறது மாகிய ஒன்றைக்கொடுத்து மற்ருென்றை பெற்றுக்கொள்ளுவோருக்கு வடமொழியில் வைசியரென் பராதலின் பசுவின் பலனை யீவோர் கெள வைசிய ரென்றும், பூமியின் பலனை யீவோர் பூவைசியரென்றும் நாணயப் பொருட் களாம் தனத்தைக்கொடுத்து முன்னிரு பொருள் கொண்டு விற்போர் தனவைசியரென்றும் வடமொழியி லழைக்கப் பெற்ருர்கள். இவர்களுள் எண்ணெய், வெண்ணெய், பசுநெய் விற்போர் எண்ணெய் வானிய ரென்றும், கோலமாம் தானியங்களை விற்போர் கோலவாணியரென்றும், சீலைகளாம் வஸ்திரங்களை விற்போர் சீலைவானியரென்றும், நகரமாம் கோட்டைக்குள் பலசரக்குகளைக் கொண்டு வந்து மிக்க செட்டாக விற்பனைச்செய்வோர் நாட்டுக்கோட்டை செட்டிக