பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2: . க. அயோத்திதாளப் பண்டிதர் இஸ்திரிகளின் பெயர் எயிற்றியர், பேதையர், மறத்தியரென்றும்; முல்லைநிலவாசப் புருஷர்களின் பெயர் முல்லையர், அண்டர், ஆன்வல்லவர், குடவர், பாலர், கோவலர், அமுதர், ஆயர், தொறுவர், இடையரென்றும் இஸ்திரிகளின் பெயர் தொறுவி, பொதுவி, ஆய்ச்சி, குடச்சி, இடைச்சியென்றும் குறிஞ்சி நிலவாசப் புருஷர்களின் பெயர், குறவர், கானவர், மள்ளர், குன்றவர், புனவர், இறவுனரென்றும் இஸ்திரீகளின் பெயர் குறத்தியர். கொடிக்கியரென்றும் மதகரி யாள்வோர்க்குப் பெயர் யானைப்பாகர், ஆதோனரென்றும், அரண்மனைக் காப்போர்க்குப் பெயர் மெய்க்காப்பாளர், காவலர், கஞ்சுகி யென்றும்; மரக்கலமோட்டுவோர்க்குப் பெயர் மாலு மி, மீகாமன், நீகானென்றும்; இரதமோட்டுவோர்க்குப் பெயர் சூதன், வலவன், சாரதி, தேர்ப்பாகனென்றும்; தோல்களைப் பதனிடுவோர்க்குப் பெயர் இயவர், தோற்கருவியாளரென்றும் நரம்பு முதலியவைகளைக் கொளுத்தித் தோற்பறைக்கொட்டி துளைக்குழ லூதுவோர்க்குப் பெயர் குயிலுவரென்றும்; ஒர் சங்கதியை மற்றவர்க் கறிவிப்போர்க்குப் பெயர் வழியுரைப்போர், தூதர், பண்புரைப்போர், வினையுரைப்போர், வித்தகரென்றும், இஸ்திரிபோகத் தழுந்திைேர்க்குப் பெயர் பல்லவர், படிறர், இடங்கழியாளர், துர்த்தர், விலங்கர், காமுகரென்றும்; மனம்வருந்த வருந்துவோர்க்குப் பெயர் அறுந்துதர், வேதனை செய்வோரென்றும்; பொருமெ யுடையோர்க்குப் பெயர் நிசாதர், வஞ்சிகரென்றும்; பயமுடையோர்க்குப் பெயர் பீதர், சகிதர், பீறு, அச்சமுள்ளோ ரென்றும்; அன்னியர் பொருளை யபகரித்து சீவிப்போர்க்குப் பெயர் கரவடர், சோரர், தேனர், பட்டி கர், புறையோர், கள்ளரென்றும்; கொடையாளர்க்குப் பெயர் புரவலர் யீகையாளர், வேளாளர், ஈசர், தியாகி, வேள்வியாளர், உபகாரரென்றும்; தரித்திரர்க்குப் பெயர் நல்கூர்ந்தோர் அகிஞ்சர், பேதையர், இல்லார், வறியர் ஆதுலர், ஏழை, உறுகளுளர், மிடியரென்றும்; மானக்கர்க்குப் பெயர் கற்போரென்றும்; ஆசாரியர்க்குப் பெயர் ஆசான் தேசிகர், உபாத்தியாயர், பணிக்கரென்றும்; அரசர் முதல் வணிகர், வேளாளர் வரை முக்குலத்தோர்க்குங் கருமக் கிரியைகளை நடத்துவோருக்குப் பெயர் சாக்கையர், வள்ளுவர், நிமித்தகர்,