பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 . க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் தலைத்தார்வேந்தர்களா யிருந்திருப்பினும் புத்த பிரான் பரிநிருவாணத்தின் நெடுங்காலத்திற்குப் பின்னர் தோன்றிய அசோக சக்கிரவர்த்தியே முக்கிய முயற்சியுடையவராயிருந்து சத்திய தன்ம சங்கங்களை இந்திரதேச மெங்கனும், மேலுமேலும் பரவச்செய்தது மன்றி சகடபாஷையாம் சமஸ்கிருமதிலும், திராவிட பாஷை யாம் தமிழிலும் புத்த தன்ம திரிபீட வாக்கியங்களையும், அதன் உபநிட்சயார்த்தங்களாம் உபநிடதங் களையும் வரைந்து கணிதங்களையும் வரிவடிவாக்கி யெங்கும் பரவச்செய்தார். இவ்வசோக சக்கிரவர்த்தியின் காலத்திலேயே தென்னிந்திய தேயம் தெளிவடைந்ததர்கும். அவரது யேவலால் வேலூரில் வினயலங்கார வியாரமும் அதுவரையில் நிருமித்துள்ள நேர்பாதையையும் இஸ்தம்பங்களில் வரைந்துள்ள லிபிகளையும் நாளதுவரையிற் காணலாம். இச்சக்கிரவர்த்திகு அசோக னென்னும் பெயர்வாய்த்த காரணம் யாதெனில் கல்லாலடி யிற் வீற்றக் கங்கையாதாரன் இராகத்துவேஷ மோகமாம் சோகத்தை அம்மரத்தடியில் வீற்று நீக்கியபடியால் அம்மரத்திற்கு அசோக விருட்ச மென்னுமோர் பெயரை யளித்திருந்தார்கள். அதுகொண்டே சக்கிரவர்த்திக்கு அசோகனென்னும் பெயரை யளிக்கப்பட்டது. அப்பெயருக்குத் தக்கவாறே சகல சோகங்களையும் வெல்லத்தக்க சத்திய தன்மத்தை இந்திர தேசமெங்கும் பரவச்செய்து தனது அசோகனென்னும் பெயரையும் கீர்த்தியையும் என்றுமழியாது நிலைநாட்டிவிட்டார். இவற்றுள் நவகண்டங்களென்னுங் கீழ்விதேகம், மேல் விதேகம், வடவிதேகம், தென்விதேகம், வடவிரேபதம், தென்னிரே பதம், வடபரதம், தென் பரதம், மத்திம கண்ட மென்னும் ஒன்பது பிரிவில் வட பரதகண்டத்திற்கு கானிஷ்கா சக்கிரவர்த்தியார் ஏ கசக்கிராதிபதியாகவும், தென் பரத கண்டமாகிய தென்பாண்டி, குடம், கற்கா, வேண். பூழி, பன்றி, அருவா, அருவாவடதலை, சீதம், மலாடு, புன்டுை, செந்தமிழ் நாடெனும் பதின்மூன்று தமிழ்நாட்டுள் வெள்ளாற்றிற்குத் தெற்கு, கன்னியாகுமரிக்கு வடக்கு, பெருவழிக்குக் கிழக்கு, கடற்கரைக்கு மேற்கு இந்தச் சதுரமத்தியில் ஜன்பத்தாறு காதம் பாண்டியன் அரசாட்சியும், கோட்டைக்கரைக்குக் கிழக்கு,