பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 2.5 கடற்கரைக்கு மேற்கு, வெள்ளாற்றிற்குத் தெற்கு இந்தச் சதுர மத்தியில் இருபத்திநாலு காதம் சோழனரசாட்சியும், கோழிக்கோட்டிற்குக் கிழக்கு, தென்காசிக்கு மேற்கு, பழனிக்குத் தெற்கு, கடற்கரைக்கு வடக்கு இந்தச் சதுரமத்தியில் எண்பது காதம் சேரன் அரசாட்சியுமாக விளங்கியதில் இம்மூவரசர்களும் மதுரைபுரம், காஞ்சிபுரம், திரிசிரபுரம், மாவலிபுரம், சிதம்புரம் முதலிய விடங்களெங்கும் புத்த வியாரங்களைக் கட்டி வைத்து சமண முநிவர்களை நிறப்பி சகடபாஷை யாம் சமஸ்கிருத பாஷையை மிக்கப் பரவச்செய்யாமல் திராவிட பாஷையாம் தமிழ் பாஷையிலேயே அனந்தங் கலைநுாற்களை வகுக்கச்செய்து தென்னடெங்கு மமைந்துள்ள அறப்பள்ளிகளாம் வியாரங்களுள் சிறுவர்களுக்குக் கலாசாலைகளை யமைத்து சமண முநிவர்களால் இலக்கிய நூல், இலக்கண நூல், கணித நூல், வைத்திய நூல், யாவற்றையுந் தெள்ளறக் கற்பித்து வந்தார்கள். இவைகளுள் அரசர்களால் அன்பு பாராட்ட வேண்டியவர்களும், அரசர்களுக்கோர் ஆபத்து வராமல் காக்கத் தக்க வன்புடைய சுற்றத்தோரை ஐந்து வகையாக வகுத்திருந்தார்கள். அதாவது, சத்திய சங்கத்துச் சமண முநிவர்களில் தண்மெய்ப்பெற்ற அந்தணர்கள் 1. வருங்காலம் போங் காலங்களை விளக்கி கருமக்கிரியைகளை நடாத்திவரும் நிமித்தகர்கள். 3. அறுசுவை பதார்த்தங்களை பாகாசாஸ்திரக் குறைவின்றிச் செய்து அன்புடன் அளித்துப் புசிப்பூட்டிவரும் மடைத்தொழிலாளரென்னும் சுயம்பாகிகள். 3. தேக லட்சணங்களையும் வியாதிகளின் உற்பவங்களையும், ஒடதிகளின் குணுகுணங்களையும் நன்காராய்ந்து பரிகறிக்கும் மாமாத்திர ராம் வைத்தியரர்கள். 4. அரசரது சுகதுக்கங்களை தங்கள் சுகதுக்கம் போற் கருதியவரது நட்பை நாடி நிற்கும் சுற்றத்தார். 5. காலதேச வர்த்தமானங்களை ஆராய்ந்து மதிகூறும் மந்திரவாதிகளாம் அமாத்தியர். 6. கணிதவழிகளை யாராய்ந்து வேள்விக்குறுதி கூறும் புரோகிதர். 7. சருவ சேனைகளுக்கும் சேநாபதியர். 8. அரசர்களுக்கு இல்லறப்பற்றின் கேடுகளையும், துறவறப்பற்றின் சுகங்களையும் விளக்கக்கூடிய தவற்ருெழிற்றுாதர். 9. வேள்வி யாகங்களுக்கு மதியூகிகளாகும் சித்தர்களாம் சாரணர்கள்.