பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் 10. நெருங்கியக் குடும்பத்தோர். 11. மேலா லோசனைக்குரிய கமவிதிக்காரர். 18. ஆடையாபரண அலங்கிரத சுற்றத்தாராகும் கனக சுற்றம். 13. அரண்மனை வாயல் காக்கும் கடைக்காப்பாளர். 14. தனது நகரத்தில் வாழும் விவேகக் குடிகளாம். நகரமாக்கள். 15. வீரர்களுக்கு அதிபதியாகும் படைத்தலைவர். 16. எதிரிகளுக்கு அஞ்சாத வீரர்களாம் மறவர்கள். 17. யானை பாகரும் சுத்த வீரருமான யானை வீரர். 18. இத்தியாதி அரச அங்கத்தினர் சூழ வாழும் வாழ்க்கையே அரசர்கட் கினியதென்று வகுத்து அரசவாட்சிகளை நிலைக்கச் செய்தார்கள். அரச வங்கத்தினரது வல்லபத்தாலும் சமண முநிவர் களின் சாதுரியத்தாலும், மகடபாஷை, சகடபாஷை, திராவிட பாஷை அங்க பாஷை, வங்க பாஷை, கலிங்கபாஷை, கெளசிகபாஷை, சிந்து பாஷை, சோனகபாஷை, சிங்கள பாஷை, கோசலபாஷை, மாரடபாஷை, கொங்கனபாஷை, துளுவ பாஷை, சாவக பாஷை, சீன பாஷை, காம்போஜ பாவுை, அருண பாவுை, பப் பிரபாஷை, முதலிய வரிவடிவங்களே யியற்றியும் விருத்திசெய்து வந்தவற்றுள் நவகண்டங்களுள் எங்ங்ணும் புத்ததன்மமாம் சத்திய தன்மமே பரவி சிறுவர் முதல் பெரியோர் வரை வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கமென்னும் நீதிநெறி வழுவா நிலையில் நின்று ஒற்றுமெயும், அன்பும் பாராட்டி சுகசீவ வாழ்க்கையில் நிலைத்திருந்தார்கள். இத்தகைய வொழுக்க விருத்திக்குக் காரணமோ வென் னில் ஒவ்வொரு சிறுவர்களையும் அறப் பள்ளிகளாம் சங்கத்திற்கு விடியர்கால மனுப்பி சமண முநிவர்கள் பால் கலைநூற்களைக் கற்று அறிவின் விருத்தி பெற்றும் நீதி நூற்களைக் கற்று ஒழுக்க நெறியில் நின்றும் ஐந்து வயது முதல் பதினறு வயதளவும் பள்ளிகளுக்குச் செல்லுவதும், சமண முநிவர்களை வணங்கி கல்வி கற்பதும் இல்லம் செல்லுவதும், தாய் தந்தையரை வணங்கி யினிதிருப்பதுமாகியச் செயலன்றி துர்சனர் சாவகாசமும் பேராசையுள்ளோர் பிறர் சிநேகமும் வஞ்சினத்தோர் சேர்க்கை வழிபாடுகளுமாகிய கேட்டு ர வினராகும் கலப்பின்மெயே காரணமாகும்.