பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 27 இத்தகைய நல்லொழுக்கக் காரணகாரிய விருத்தியி லிருந்தும் பகவல்ை போதித்துள்ள சத்திய தருமமாம் மெய்யறத்தின் ஆதியும் அந்தமுங் கண்டடைவோர் கோடியில் ஒருவரேயன்றி சகலருந் தெரிந்துக்கொள்ளக்கூடாத பேரறிவின்படித் தறத்தினின்றது. அது கண்டு சமணமு நிவர்களிற் சிலர் தங்கடங்கள் வசதிக்கும், தங்கடங்க ளறிவின் விருத்திக்கும், தங்கடங்கள் சாதனத்திற்கும், தங்கடங்கள் காலத்திற்குத் தக்கவாறு புத்தபிரான் தன்மபோதத்திற்கு மாறுபாடின்றி காலத்திற்குத் தக்க யேதுக்களை மாறுபாடுசெய்து அவரவர்கள் மாறு படுத்தியக் காலத்தையே சமயமெனக் குறிப்பிட்டு பிரகஸ்பதி கால மாறுதலை பெளத்த சமயமென்றும், கினன் கால மாறுதலை உலோகயித சமய மென்றும், கபிலன் காலமாறுதலை சாங்கய சமயமென்றும், அங்கபாதன் காலமாறுதலை நொய் யாயிக சமயமென்றும் கணுதன் காலமாறுதலை வைசேவிக சமயமென்றும், சைமினியின் கால மாறுதலை மீமகாம்ஸ் சமயமென்றும் மாறுபடுத்தி தங்கள் தங்கள் யேதுக்களுக்குத் தக்கவாறு நிகட்சிவில் விடுத்து ஆறு பெயரால் மாறுபடுத்திய அறுவகைக் காலக்குறிப்புகளை அறுசமயங்களென வழங்கி வந்தார்கள். புத்தபிரான் பரிநிருமானமடைந்த நெடுங்காலத்திற்குப் பின்னர் சீவகாருண்யமும் அன்புமிகுத்து போதிக்குந் திடமுள்ள சமணமுநிவர்களிற் சிலர் தாங்கள் பெறுஞ் சுகத்தை யேனைய மக்களும் பெற்று சுகமடையவேண்டு மென்னும் கருணையால் வெளிதோன்றி வருவதுண்டு, அவ்வகைத் தோன்றியவர்களின் காலக்குறிப்பையும் அவரவர்கள் முக்கியமாக வைப்புறுத்திக் கூறிய வாக்கையும், அதுசரித்து அந்நன்னேர் காலக்குறிப்பை அந்நோர் சமயமென வகுத்துவந்தார்கள். இவற்றுள் பெளத்த சமயம் யாதெனில் பிரகஸ்பதி முநிவர் வெளிதோன்றி சகலருக்கும் சத்தியதன்மத்தை விளக்கி வருங்கால் நாம் புத்தரது சமயதன் மத்தை யது சரிப்பவர்களாயினும் நமக்குள்ளப் பொய், வஞ்சினம், சூது, பொருமெய், நம்மெய் விட்டகலா திருக்கின்றபடி யால் நம்மெ நாம் புத்த சமயத்தோரென்றும், புத்தர்களென்றும் கூறுதற் கியலாதவர்களா யிருக்கின் ருேம். ஆதலின் நம்மெய் நாம், பெளத்த