பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 க. அயோத்திதாளலப் பண்டிதர் சமயத்தோரென்றும், பெளத்தர்களென்றுங் கூறி சத்திய தன் மத்தில் நடந்து துக்கத்தைப் போக்கிக்கொள்ளும் வழிகளை போதித்த காலத்தையும், அவரது பிரதான மொழியையுங் கொண்டு பிரகஸ்பதி முநிவர் காலமாருது பெளத்த சமயமெனக் கொண்டாடி வந்தார்கள். சின முநிவரது காலக்குறிப்பைக்காட்டும் உலோகயித சமயமாவது யாதெனில் சினமுநிவர் வெளிதோன்றி தனது அன்பின் மிகுதியால் சகல மக்களுக்கும் சத்திய தன்மத்தை விளக்கிவருங் காலத்தில் சக்கிரவர்த்தித் திருமகனயிருந்தும் உலோக யிதமாம் பொன்னசை, மண்ணுசை, பெண்ணுசை முதலிய யின் பங்களாம் இதங்களைத் தவிர்த்து அவலோகித ரென்னும் பெயர்பெற்ற அறவாழியானது தன் மத்தைப் போதிப்பவர்களாகிய நாம் மண்ணுசைப், பெண்ணு சைப் பொன்னசை, மூன்றிலொன்றையேனும் விடாச்சிந்தையை யுடையவர்களாயிருந்தும் நம்மெய் நாம் அவலோக யித சமயத்தோரென்றும், அவலோகித கூட்டத்தோரென்றும் சொல்லப்போமோ, ஒருக்காலும் சொல்லலாகாது. ஆதலின் மண்ணுசை, பெண்ணுசை, பொன்னுசை இம்மூன்றும் நம்மெய் விட் டகலும்வரையில் உலோகயித சமயத்தோர்களென வழங்கி சத்தியதன் மத்தினின்று ஆசாபாசக் கயிறுகளை யறுத்து அவலோகிதராகவேண்டும். அதுவரையிலும் நாம் உலோகயித சமயத்தோரென்றே வழங்க வேண்டுமெனக் கூறி மூவாசைகளை யறுக்கத்தக்க வழிகளைப் போதித்தக் காலக் குறிப்பை மாருது சினமுநிவர் உலோகாயித சமயமெனக் கொண்டாடி வந்தார்கள். கபிலமு நிவரது காலக்குறிப்பைக் காட்டும் சாங்கிய சமயமாவது யாதெனில்: கபில முநிவர் வெளிதோன்றி பகவனது சத்திய தன்மங்களை விளக்கி வருங்கால் புத்த சங்கத்தோர் சாங்கியங்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டு நிலை பிரழ்ந்திருப்பதை யுணர்ந்து சங்கத்தோர் சாங்கியங்களாகும் படுக்கை நிலையும், எழுந்திருக்குங் காலமும், மணற்கொண்டு தேகத்தைக் கழுவுஞ் செயலும், புசிப்பின் காலமும், பதார்த்த வகையும், ஆசன ւ՞ւ-(քա, வாசிப்பின்னேரமும், போதிக்குங்காலமும், சாதன வொழுங்கும்