பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 க. அயோத்திதாளலப் பண்டிதர் பாஷையில் அந்தணரென்றும் அழைக்கப்பெற்ற புத்தசங்கத் தலைவர்களை அரசர் வணிகர், வேளாளரென்ற முத்தொழி லாளர்கள் கண்டவுடன் அவர்களடி பணிந்து வேண வுதவி புரிந்து வருவதையுங் கண்ணுற்றுவந்த மிலேச்சர்கள் சத்தியாசங்க நூற்களுக் குறுதிபாஷையாகும் வடமொழியையும் தென்மொழியையும் கற்றுக்கொள்ள வாரம்பித்தார்கள். பாஷைகளைக் கற்றுக்கொண்டபோதிலும் சமணமுநிவர் களின் சாதனங்கள் விளங்காமலும், அச்செயலிற் பழகாமலும் அவர்களது நடையுடை பாவனைகளையும் மகடபாஷை, சகட பாஷை, திராவிட பாஷைகளில் அவர்கள் எதேது மொழிகின்ருர்களோ அம்மொழிகளைக் கற்றுக்கொண்டும் தங்கடங்கள் பெண்டு பிள்ளைகளுடன் பிச்சை யிரந்துண்டு சிந்துாரல் நதியின் கரையோரம் போய் தங்கிக்கொள்ளுவது மாகியச் செயலி லிருக்குங்கால் இத்தேசக் குடிகளின் பார்வைக்கு அவர்களுடையப் பெண்கள் கால்செட்டை யணிந்துக்கொண்டும், புருஷர் பெரும்வஸ்திரமும் செட்டையு மணிந்து நீண்டவுருவும் வெண்மெ நிறமு முள்ளவர்களாய்த் தோற்றுங்கால், நீங்கள் யாவரென்று கேட்க யாங்கள் நதியின் அக்கரையோரத்தார், அக்கரையோரத்தாரென விடை பகர்ந்துக்கொண்டே வந்தவர்கள், கல்வியற்றப் பெருங்குடிகளை யடுத்து மகட பாஷையில் யாங்களே பிராமணர்களென்றும், திராவிட பாஷையில் யாங்களே அந்தணர்களென்றுங் கூறி தங்களுக்கே சகல தானங்களும் கொடுக்கும்படி வேதம் கூறுகிறதென்று மொழிந்து பயத்துடன் பிச்சையிரந் துண்டவர் கள் சில சகடபாஷை சுலோகங்களைச் சொல்லிக்கொண்டு அதிகாரத்துடன் பிச்சையிரக்க வாரம்பித்துக் கொண்டார்கள். இவர்க ளித்தேசத்தோர்களிலும் மிக்க வெண் மெய் நிறமுடையவர்களா யிருந்து கமண முநிவர்களைப் போன்ற பொன்னிற வாடையுடுத்திய வேஷமானது கல்வியற்றக் குடிகளின் கண்களைக் கவர்ந்துக்கொண்டதன்றி இவர்களே சங்கத்து அறஹத்துக்களென்றும் பயந்து சகல பொருட்களும் கொடுக்க வாரம்பித்துக் கொண்டார்கள். இவ்வேஷப் பிராமணர்களோ சங்கத்தோ ரருகிலும் நன்கு வாசித்துள்ள உபாசகர்கள் வீடுகளுக்குஞ் செல்லாமல்