பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 37 வசப்படுத்திக்கொண்டு அவைகளாலும் சுகப் புசிப்பைத் (3 க்கொண்டார்கள். த இவ்வகையாகத் தங்களைத் தாங்களே பிராமணர் பிராமணரெனக்கூறி பெருங்குடிகளை வஞ்சித்து பொய்யைச் சொல்லி சீவித்து வந்தபோதிலும் பெளத்த சங்க யதார்த்த பிராமணர்களின் செயலும், அவர்கட் செயல்களின் ஞானவாக்கியங்களும், அவ்வாக்கியங்களின் ஞானுர்த்தங்களும் வேஷப்பிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் இவர்களின் முற்றுந்தெரியாக் கல்வியற்றக் குடிகள் பொய்க்குருக்களை யடுத்து பெளத்த சங்க ஞானகுருக்கள் உபநயனஞ் செய்வதாகக் கூறி அவுற்பிரசாத மளிப்பார்கள். விரதம் நியமித்த லென்று அவுற்பிரசாத மளிப்பார்கள். நோன்பியற்றுதலென்று கூறி அவுற் பிரசாத மளிப்பார்கள். யாகமியற்றலென்று கூறி அவுற்பிரசாத மளிப்பார்கள். ஆதிகன் மஞ் செய்தலென்று அன்னதானஞ் செய்வார்கள். பிறவியறுக்கும் சாதரைம்பத்தில் அன்னதான மளிப்பார்கள். இந்திரவிழா காலங்களிலன்னதான மளிப்பார்கள் இவைகளொன்றையுந் தாங்கள் செய்வதைக் காணுேம். அவ்வகைச் செய்யாதக் காரணங்க ளென்னை யென்று கேட்பார்களாயின் பெளத்ததன்ம ஞான ரகசியங்க ளறியா அஞ்ஞானிகளா யிருந்தபோதிலும் மித்திரபேதத் தந்திரங்களில்ை அதன் பொருளும் செயலும் தெரிந்தவர்கள் போல் நடித்து கல்வியற்றவர்களை வஞ்சித்து அந்தந்த வாக்கியங்களைக்கொண்டே பொருள் பரித்து சீவிக்கும் வழிகளைத் தேடிக்கொண்டார்கள். எவ்வகையா லென்னில், பெளத்த சங்கத்திலுள்ள சமண முநிவர்களுக்கு சிரமணர்களில் சித்திப்பெற்ற பிராமணர்கள் அஞ்ஞான விழியாம் ஊனக்கண் பார்வையை யகற்றி மெய்ஞ்ஞான விழியாம் ஞானக்கண் பார்வையில் நிலைக்கச் செய்வார்கள். அதாவது, ஊனக்கண்னற்று ஞானக்கண் பெற்றபடியால் அவர்களை உபநயனம் பெற்றவர்களென்று கூறி பேரானந்த வுபநயனம் பெற்ற பெரியோர்களென்று சகலரு மறிந்து அவர்கள் சுகசாதனங்களுக்கு வுதவி புரிந்து வருவதற் காக மதாணி பூநூலென்னும் முப்பிரிநூற் கயிற்றினை யவர் மார்பி லனேந்து அவ்விடம் வந்துள்ள சகல மக்களுக்கும்