பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 க. அயோத்திதாஸப் பண்டிதர் பூநூலணைந்துள்ளவரை சுட்டிக்காட்டி இவர் உபநயனம்பெற்ற பெரியோன் இவரது உள்விழி சாதனத்திற்கு யாதாமொரு குறைவு நேரிடாமல் வேண்டியவைகளைக் கொடுத்துக் காக்கவேண்டுமென்று கூறி வந்துள்ளவர்கள் யாவருக்கும் அவுற்பிரசாதங் கொடுப்பது வழக்கமாகும். சமண முநிவர்களில் உபநயனம் பெற்ருேர் 2 லகத்தை நோக்கும் ஊனக்கண் பார்வையை யகற்றி “உள்விழிப் பார்வையாம் ஞானக்கண் பார்வையில் நிலைத்து ஐம்புல பீடமுணர்ந்து அடங்கவேண்டியவர்க ளாதலின் மடங்களை விட்டு வேறிடங்களுக்குச் செல்லாமல் ஞான சாதனங்களை செவ்வைப்படுத்திக் கொள்ளுவதற்காக உபாசகர்கள் அவர்களுக்கு வேண்டிய புசிப்பும் சாதனத்திற்குரிய பீடங்களும் கண்ணுேக்கமிட்டளித்து வருவதற்காக உபநயனம் பெற்ருேர் மார்பில் முப்புரி பூணு நூலை அடையாளமாக அணிந்து வைத்தார்கள். சமணமுனிவர் கூட்டங்களில் முப்புரி நூலணிந்துள்ளவர் களை உபாசகர்கள் கண்டவுடன் அவர்களருகிற் சென்று வணங்கி அவர்களுக்கு வேண்டி யவற்றைக் கேட்டு உடனுக்குடன் கொடுத்து வருவது வழக்கமாகும். உபநயனமாம் உதவிவிழி பெற்ருேர் உள்விழி பார்வை யாம் ஞான சாதனத்தை யாதொரு கவலையுமின்றி சாதித்து கடைத்தேறுதற்கு யீதோர் சுகவழியாகும். இத்தகைய பேரானந்த ஞானச்செயலின் ரகசியார்த்தம் விவேகமிகுந்த விசாரணைப் புருஷர்களுக்கும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களுக்கும் விளங்குமேயன்றி ஏனையோருக்கு விளங்கமாட்டாது. விளங்கா கூட்டத்தோர் பெருகிவிட்டபடியால் வேஷப் பிராமணர்களை யடுத்து அவிற் பிரசாதங் கேட்க வாரம்பிக் குங்கால் வேஷப்பிராமணர்கள் உபநயணமென்னும் வார்த்தை யின் பொருளும், அதன் செயலும் தெரியாதவர்களாயிருந்த போதினும் அவ் வார்த்தையைக் கொண்டே பேதை மக்களை யேமாற்றி நான் பிராமணனைதால் என் பிள்ளைக்கு உபநயனஞ் செய்து என்னைப்போல் பூநூ லணியப் பொருளுதவி