பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 39 செய்யுங்கோளென்று பொருள் பரித்துப் புசிப்பதற்கு இதையுமோர் வழியாகச் செய்துகொண்டார்கள். கல்வியற்றக் குடிகளோ வேஷப்பிராமணர்களைத் தடுத்து உபநயன மென் பதின் பொருளென் ன, முப்புரி நூலணிவதின் காரணமென்ன, அதற்காக நேரிடும் செலவென்ன, அவ்வகைச் செலவு தொகையைத் தங்களுக்குக் கொடு ப் பதில்ை எங்களுக்குப் பயனென்ன வென்று கேட்காமலே பொருளுதவிச்செய்ய வாரம்பித்துக் கொண்டார்கள். இவ் வுபநயணமென்னும் மொழியே வேஷப்பிராமணர்களின் தந்திர சீவனத்திற்கு நான்காம் யேதுவாகிவிட்டது. - பெளத்த வுபாசகர்களின் விரதமாவது யாதெனில், சத்தியசங்க வியாரங்களுக்குச் சென்று புருஷர்கள் பஞ்ச சீலங் கார்ப்பதுடன் மனம்போன வழிப் போகவிடாமற் கார்ப்பது விரதம், இஸ்திரீகள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் தங்களது கற்புக்கோர் பின்னமும், வராமற் கார்ப்பது விரதம், மைந்தர்கள் பஞ்சசீலங் கார்ப்பதுடன் கலைநூற்களைக் கற்று அறிவை விருத்திசெய்து தேகத்தைக் கார்ப்பது விரதம். இவ்விரதத்தை சதா சிந்தனையிற் கார்ப்பதற்கு அமாவாசி, பெளர்ணமி, அட்டமி இம்மூன்று தினத்தும் தாங்களனிந்துள்ள பட்டாபரணம், வெள்ளியாபரணம், தங்கவாபரணம் யாவையுங் கழட்டி வீட்டில் வைத்துவிட்டு துய்ய வஸ்திரங்களை யணிந்து மடங்களுக்குச் சென்று யதார்த்த பிராமணர்களாம் அறஹத்துக் களே வணங்கி புருஷர்கள் பஞ்சசீலம் பெற்று மனதைக் கார்ப்பதும், இஸ்திரீகள் பஞ்சசீலம் பெற்று கற்பைக்காப்பதும், பிள்ளைகள் பஞ்சசீலம் பெற்று தேகத்தைக் கார்ப்பதுமாகிய விரதத்திலிருந்து அன்று முழுவதும் ஒரே வேளை அன்னம்புசித்து அவரவர்களில்லஞ்சேர்வ தியல்பாம். இத்தகைய, விரதசாதனங்களுந் தக்க விவேகக் குடும்பத்தோர்க்கு விளங்குமேயன்றி அவிவேக குடும்பத் தோர்க்கு அதன் செயலும், பயனும் விளங்கவே விளங்காவாம். விளங்காக் குடும்பங்கள் பெருகி வேஷப்பிராமணர்களை யடுத்துக்கொண்டபடி யால் வேஷப்பிராமணர்களை விரத மென்னையென்று கேட்குங்கால் கார்ப்பது விரதமென்னும் சாராம்ஸ்மே யறியாதவர்களாயிருந்தும் வேஷப்பிராமணர்கள்