பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் தங்களுடைய தந்திரோபாயத்தால் மிக்க தெரிந்தவர்களைப்போல் கல்வியற்றக் குடிகளை மயக்கி பலவகைப் பொய் தேவதாப் பெயர்களைச் சொல்லி சோமவார விரதம், மங்கள வார விரதம், சனிவார விரதம், சுக்கிரவார விரதமெனும் உபவாசங்களை யதுஷ்டித்து எங்களுக்கு தானஞ்செய்து வருவீர்களாயின் சகல சம்பத்தும் பெருகி சுகசிவிகளாக வாழ்விர்களென்று கூறி பொருள் பரித்து சீவிப்பதற்கு விரதமொழியே ஐந்தாவ தேதுவாகிவிட்டது. பெளத்த வுபாசகர்கள் செய்துவந்த நோன் பென்னும் செயல் யாதெனில், பஞ்சசீல தன் மத்தில் அகிம்ஸா தன்மமே விசேஷ தன்மமாதலின் ஒருயிரைக் கொல்லவும்படாது, அதன் மாமிஷத்தைப் புசிக்கவும் படாதென்னும் முதன்னேன்மெ யடையவேண்டி சங்கத்துள்ள அறஹத்துக்களே வணங்கி பஞ்சசீலத்தில் கொன்று தின்னமெ யென்னும் முதல் நோன்மெ யளிக்கவேண்டுமெனக் கேட்பது வழக்கமாகும். அவ்வகை வினவிய மொழியை ஞானசிரியர்க் கேட்டவுடன் மிக்க மகிழ்ச்சியுடையவராய் உபாசகனது வலது புஜத்தில் இனியொருகால் சீவர்களைக் கொல்லுவதுமில்லை, புசிப்பது மில்லையென்னுங் கங்கணங்கட்டி வந்துள்ள உபாசகர்கள் யாவருக்கும் அவுற் பிரசாத மீய்ந்து குருவினது ஆசீர் பெற்றில்லஞ் சேர்ந்து நோன்பென்பதுக் கொன்று தின்னமை யென்னுங் குறியை புஜத்திற்கண்டு நோன்பின் னெறியினின் ருர்கள். யீதோர் அகிம்ஸாதன்ம அறநெறியாகும். இத்தகைய வகிம்சா தன்மத்தின் சிறப்பும் அதன் பலனும் அதற்குறித்தாய பஞ்ச நோன்பென்னு மொழியின் பொருளு மறியாத பெருங்குடிகள் வேஷ ப் பிராமணர்களை யடுத்து நோன்பின் விஷயங்களை வினவுங்கால் மிலேச்சராம் ஆரியக் கூட்டத்தோர்க்கு அம்மொழியின் பொருள் விளங்கர்திருப்பினும் பெளத்த சங்கத்தோருள் கேசரி, பைரவி, சாம்பவி என்னும் மூன்று ஞான முத்திரைகள் வழங்கி வருவதுண்டு. அப்பெயரை மூலமாகக்கொண்டு கேதாரி யென்னும் பூதாரி அம்மனிருக் கின்ருள். அவளை சிந்தித்து வீடுகடோருங் கயிறுகளை வைத்து பூசித்து எங்களுக்கு தட்சணை தாம்பூலம் வைப்பீர்களாயின் அக்கயிறுக்கு மந்திர வுச்சாடனம் செய்து கொடுப்போம். அதை