பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 4 I நீங்கள் கட்டிக்கொள்ளுவீர்களானல் சகல சம்பத்தும் பெற்று சுகம் பெறுவீர்களென்று கூறி பொருள் சம்பாதித்துக் கொள்ளுவதற்கு நோன் பென்னும் மொழியே ஆருவ தேதுவாகிவிட்டது. . பெளத்தர்களின் யாக வகைகள் யாதெனில்:- மகட பாஷையாம் பாலியில் யாகமென்றும், சகடபாஷையாம் வட மொழியில் வேள்வியென்றும், திராவிட பாஷையாம், தென் மொழியில் புடமென்றும் வழங்கிவரும் வார்த்தைகளில் பதிநெட்டுவகை யாகங்களைச் செய்துவந்தார்கள். அதாவது குண்டமென்னுங் குழிவெட்டி அக்கினி வளர்த்தி மருந்துகளின் புடமிடுவதும், ஈட்டி, வாகுவல்லய மிவைகளுக்குத் துவையலேற்றுவதும், அவைகளா லுண்டாம் மூர்ச்சைகளைத் தெளிவித்தலும், வானம் வருவிக்கச் செய்தலும், அதிக மழையை அகற்றுவித்தலும், ஒடதிகளைக் குடோரித்தலும், உறுக்குதலும், செந்தூரித்தலும், பஸ்பித்தலும், அரசர்களுக்கு தாமரைப்புட்ப கன்னம்முடித்தலும் தேகபல வோடதிக ளமைத்தலும், நரருக்கு சுகபுகையூட்டி நீதிநெறிகளைப் புகட்டி மக்கள் கதிபெறச் செய்தலும் மக்களுக்கு சுகபுகையூட்டி ஞான நெறி புகட்டி பிரமகதி பெறச் செய்தலுமாகிய சோதிட்டோம யாகம், அக்கினிட்டோமயாகம், மத்தியாகினிட் டோமயாகம், வாசபேயயாகம், மத்திராத்திரயாகம், சேமயாகம், காடகயாகம், சாதுரமாகியாகம், சாவித்திராமணியாகம், புண்டரீக யாகம், சிவகாமயாகம், மயேந்திர யாகம், மங்கிக்கவுே யாகம், இராசசுக யாகம், அச்சுவதே யாகம், விச்சுவதித்து யாகம், நரமித யாகம், பிரமமித யாகம் என்பவைகளேயாம். இவற்றினுள் முக்கியமாக சருவ மக்களுக்கும், அவுற்பிரசாத மளித்துவரும் நான்கு யாகங்கள் யாதெனில்:ஈட்டி யாகம், எச்சயாகம், ஒமயாகம், கிருதயாக மென்பவை களேயாம். யீட்டி யாகமாவது மிருகங்கள் மீதும் மக்கள் மீதும் பட்டவுடன் மூர்ச்சையுண்டாகச் செய்தல், எச்சயாகமென்பது அம்மூர்ச்சையைத் தெளிவிக்கச்செய்தல், கிருதயாக மென்பது ஆயுதம்பட்ட காயங்கள் ஆருதிருக்குமாயின் அவற்றை ஆறச் செய்தல், ஒமயாகமென்பது மழையில்லாத காலத்தில் வருவிக்கச் செய்தல் இவற்றை இந்திரயாகமென்றுங் கூறப்படும்.