பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 47 செய்யும் வீதிகளில் மட்டிலும் வர விடாமல் துரத்தி சானந்துளிர்த்து வந்தார்கள். பழைய வேஷப் பிராமணர்களுடன் புதிய வேஷ ப் பிராமணர்களும் மேலு மேலும் பெருகுவதில்ை ஒருவருக்கொருவர் புசிப்பற்றும், ஒருவருக்கொருவர் பெண் கொடுக்கல் வாங்கலற்றும், ஒருவரைக் கண்டால் ஒருவர் முறுமுறுத்துக் கொண்டு போவதே வழக்கமா யிருந்ததன்றி நீங்களெல்வகையால் பிராமணர்களானிர்களென்னும் வின வெழுவுமென்றெண்ணி அந்தந்த பாஷைக்கார, வேஷப்பிராம னர்கள் அவரவர்களுக்குள்ளடங்கி கல்வியற்றக் குடிகளை வஞ்சித்துப் பொருள் பரித்துண்ணும் சோம்பேறி சீவனத்தை விருத்திக்குக் கொண்டுவந்து விட்டார்கள். மிலேச்சர்கள், பெளத்த சங்கத்திலுள்ள அறஹத்துக்களாம் யதார்த்த பிராமணர்களைப்போல் வேஷமிட்டு சோம்பேறி சீவனஞ்செய்ய வாரம்பித்துக்கொண்டதும் அவர்களின் சுகசீவனங்கண்ட ஆந்திரர்களும், கன்னடர்களும், மராஷ்டகர் களும், திராவிடர்களும் தங்கடங்கட் பெண்டு பிள்ளைகளுடன் பிராமணர்களென வேஷமிட்டு கல்வியும் விசாரனையுமற்றப் பெருங் குடிகளையும், ஞானமற்ற அரசர்களையும் வஞ்சித்து சீவிக்க வாரம்பித்த செய்கையால் ஆந்திரசாதி யரசன், கன்னடசாதி யரசன் மகளை விவாகம் புரிவதும், சிங்களசாதி யரசன் மகன் திராவிடசாதி யரசன் மகளை விவாகம் புரிவதும், வங்காளசாதி யரசன் மகன் சீனசாதி யரசன் மகளை விவாகம் புரிவதும், அரசனெவ்வழியோ குடி களு மவ்வழியெனும் ஒற்றுமெயும் அன்பும் பாராட்டி அபேதமுற்று வாழ்ந்துவந்த இந்திர தேசத் தாருக்கு பேதமுண்டாகி ஒருவருக்கொருவர் பொசிப்பிலும், ஒருவருக்கொருவர் கொள்வினை கொடுவினையிலும் பிரிவினைக ளுண்டாகி வித்தியர் கேடுகளும், விவசாயக் கேடுகளும் பெருகி தேசமும் தேசத்தோர்களுங் கெடுதற்கு இவர்களது பிராமண வேஷமே அடிப்படையாயிற்று. மிலேச்சர்களாம் ஆரிய வேஷப்பிராமணர்கள் ஆந்திர வேஷப் பிராமணர்களைக் கண்டவுடன் சீறுகிறதும், ஆந்திர வேஷப் பிராமணர்கள் கன்னட வேஷப் பிராமணர்களைக் கண்டவுடன் சீறுகிறதுமாகியப் பொருமெயால் உள்ளத்தில்