பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

–48 க. அயோத்திதாளலப் பண்டிதர் வஞ்சினத்தை விளைவித்துக் கொள்ளுவதேயன்றி நீங்களெப்படி பெண் டு பிள்ளைகளுடன் பிராமணர்களாகிவிட்டீர்கள், அவர்களெப்படி பெண்டு பிள்ளைகளுடன் பிராமணர்களாகி விட்டார்களென்னுங் கேள்விகளில்லாமல் அரசன் கெட்டா லென்ன குடிகள் கெட்டாலென்ன வித்தைகள் கெட்டாலென்ன விவசாயங் கெட்டாலென்ன தங்கடங்கள் பெண்டு பிள்ளை களுடன் பிராமண வேஷத்தோர் பிழைத்துக்கொண்ட்ால் போதுமென்னும் சுயப் பிரயோசனத்தைக் கருதி சகலரையுங் கெடுக்க வாரம்பித்துக்கொண்டார்கள். புத்தரது தன் மத்தின் சிறப்பையும், அவரது அளவுபடாஞானத்தின் களிப்பையும் அநுபவத்திற் கண்டு ணர்ந்த சமண முநிவர்கள் ஞானத்தின் செயல்களுக்கும், வித்துவத்தின் செயலுக்கும், தொழில்களின் செயல்களுக்கும் தக்கவாறு வடமொழியிலும், தென்மொழியிலும் சிறந்த பெயர்களை யளித்து அவரவர்கள் அந்தஸ்திற்கும், செயலுக் குந்தக்க மேறை மரியாதையுடன் உலகமக்க ளொழுகும் ஒழுக்கங்களை வகுத்துவைத் திருந்தார்கள், அத்தகைய சிறப்புப்பெயர்கள் தோன்றுவதற்கு ஆதார பூதமாக விளங்கியவர் புத்தபிரானே யாதலின் அவரது தன்மச்செயலுக்கும் குணத்திற்கு மளித்துள்ள ஆயிர நாமங்களில் பிரம்மமென்னும் பெயரையும், பிதாமகன் பிதாவிதாதா வென்னும் பெயரையும் நிலைபடக்கொண்டு மற்றும் பெயர் களையும் சிறப்பிக்கலானர்கள். சித்தார்த்தருக்கு பிரம்மமென்னும் பெயரை யளித்தக் காரணம் யாதெனில், அஃதோர் சாந்தத்தின் பூர்த்தியடைந்த பெயராகும். அதாவது, பூமியை யொருவன் கொத்தி பலவகைத் துன்பப்படுத்தி பழுக அழுகக் கலக்கி பண்ணையாக்கினும் அப்பூமி நற்பல னளிக்குமே யன்றி தன்னை துன் பஞ்செய்தார்களே யென்று துற்பலனளிக்காவாம். அதுபோல் ஒரு மனிதனை மற்ருெரு மனிதன் வைது துன்பப் படுத்தி பலவகையானக் கெடுதிகளைச் செய்யினும் அஃதொன் றையுங் கருதாது அவனுக்கு, நற்பலனளித்து தன்னைத் துன்புறச்செய்தோனுக்கு மேலு மேலும் இன் புறச்செய்து காக்குங் குண நிலைக்கு பிரம்மமென்னும் பெயரை யளித்துள்ளார்கள். அதையே, உண்மெயில் தண்மெநிலையுற்ற