பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 49 சுயஞ்சோதியென்று ங் கூறப்படும் மகடபாஷையில் பிம்பமென்றும், சகடபாஷையில் பிரம்மமென்றும் சுயஞ்சோதி யென்றும் திராவிட பாஷையில் உள்ளொளியென்றும் சித்தார்த்தரது குணநிலையை சிறப்பித்திருந்தார்கள். பிதாமகன், பிதாவிதாதாவென்னும் பெயரோவென்னில், சுத்தோதய சக்கிரவர்த்திக்கு மகனுகப் பிறந்து தனத தந்தைக் கே குருவாக விளங்கி ஞான வுபதேசஞ் செய்துள்ளபடி யால் பிதாவுக்கு மகனும் பிதாவுக்கு தாதாவுமென்றழைத்துள்ளார்கள். பிரமன் மேதினி சிறந்தோன் பிதாமகன் பிதாவிதாதா வென்றும், உலக சீர்திருத்த ஆதிபகவனென்றும், ஆதிதேவ னென்றும், ஆதி கடவுளென்றும், ஆதி முநிவனென்றும், ஆதி பிரம்மமென்றும் அழைக்கப்பெற்ற புத்தபிரானை மற்றும் வீணை நான்முக விளிப்பாலும், நான்கு சிறந்த வாய்மெயாலும் நான்முக பிரமமென்றும் அழைத்துவந்தார்கள். உலகத்தின் ஆதி சீர்திருத்த வுலகநாதனுக விளங்கி சருவ கலைகளுக்கும் நாயகனுகி என்றுமழியா பேரானந்த ஞானத்தை விளக்கி முத்திபேருக்கு முதல்வனை பிரமனின் நான்குவாய்மெ யுணர்ந்து தண்மெயடைந்து பிரம்ம மனமுண்டானபோது அவனது ஞான வல்லபத்தை சிறப்பிப்பதற்காய் புத்தபிரானம் பிரம்மனின் முகத்திற் பிறந்தவனென சிறப்பித்துக்கூறி சங்கத்தோர்களுக்கு அதிபதிகளாக்கிவைத்தார்கள். பகவனது தன்மநெறி கடவாது சித்திபெற்றவர்களை பகவன் முகத்திற் பிறந்தவர்களென அவரது அளவுபடா சிறப்பைக்கொண்டே பிரம்மமண மடைந்தோரை சிறப்பித்து மகட பாஷையில் அறஹத்தென்றும், சகட பாஷையில் பிராமணனென்றும், திராவிட பாஷையில் அந்தண ரென்றும், தென் புலத்தோ ரென்றும் சிறப்பித்துக் கொண்டாடி வந்தார்கள். ஞானிகளாம் பிராமணர்களின் சீர்திருத்தத்தால் உலக மக்கள் சுகம்பெற்று வாழ்ந்தபோதிலும் மக்களது யிடுக்கங்களைக் கார்த்து ரட்சிக்கும் நீதியும், வல்லமெயும் புஜபல பராக்கிரமமு மமைந்த கூடிாத்திரியவான் ஒருவ னிருக்கவேண்டிய தவசிய மாதலின் அவனும் புத்தபிரானம் பிரம்மன நீதி நெறி தவராது குடி களை யாண்டு ரட்சித்து வருவாயிைன் பிரம் மனது