பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 § க. அயோத்திதாளலப் பண்டிதர் தென் பட்டோராம் தென் புலத்தோரென்னும் அந்தனர் களுக்கும், ஏழைகளுக்கும் யீதல், பசுக்கள் விருத்தியடையத்தக்க வழிகளைத் தேடுதல், உழவுக்கு வேன முதலுந் தானிய மு மளித்துக் காத்தல், ஒன்றைக்கொடுத்து மற்ருென்றை மாறும் வியாபாரத்தை விருத்திச்செய்தல் ஆகிய வறு தொழிலும் வணிகர் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும். சூஸ்த்திரர்களென்னும் வேளாளர்கட் தொழில்கள் யாதெனில், பூமியை உழுது பண்படுத்தி தானியங்களாம் பலவளம் பெருகச்செய்தல், பசுக்களுக்கு சேதம் வராது காத்தல், வியாபாரத்திற்கான தானிய விருத்தி யுதவல், பட்டு பருத்தி முதலியவற்றை விருத்தி செய்து ஆடைகளாங்காருகவினை செய்தல், தோற்கருவி துளைக்கருவி முதலிய சூஸ்திரங்களியற்றி குயிலுவத்தொழிற் செய்தல், தாய் வயிற்றினின்று பிறக்கும் பிறப்பொன்றும், ஞானசாதனம் முதிர்ந்து நிருவானம் பெற்று பரிநிருவான மாம் தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறக்கும் பிறப்பொன்றுமாகிய இருபிறப்பாளராம் அந்தனர் களுக்கு வேண்டிய யேவல் புரிதல் ஆகிய வறுதொழிலும் வேளாளர்கள் செய்யவேண்டிய தொழில்களென்னப்படும். இத்தகைய நீதிநெறிவழுவா அறுதொழில்களினை நடாத்துவோர் தேசத்தில் பொன்பொருள், விளைவு, பற்பல தானிய விளைவு, கொலைபாதகச் செயலற்று வாழ்தல், களவு முதலிய வஞ்சகமற்ற வாழ்க்கை, கொள்ளைநோ யுபத்திரவமற்ற சுகம், ஆற்றலும் அமைதியுமாகிய வானந்தத்தில் வாழ்வார் களென்று அறுவகை நன்னட்ட மதியையும் வகுத்துள்ளார்கள். நீதிவழுவா புத்தராம் பிரம்மனி நின்று தோன்றியவர் களெனக் கூறுவோர் செய்யுந் தொழிற்பெயர்கள் யாவும் நன்மார்க்கத்தில் நடந்து நன்முயற்சியிலிருந்து நல்லுக்கம் நிலைத்து நன்மெய்க் கடைபிடித்து சகல மனுக்களும் சுகச் சீர்பெற்று நித்தியானந்த வாழ்க்கை யடைவதற்காக வகுத்திருந்தார்கள். அத்தகையப் பேரானந்த ஞானத்தின் கருத்தும் நித்தியானந்த வாழ்க்கையின் செயலும், தொழில்களுக்காய சீர்திருத்த சிறப்பின் பெயரும் ஆரியர்களாம் வேஷப்