பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5-f க. அயோத்திதாளலப் பண்டிதர் பிறந்தவர்களென்னும் கட்டுக்கதையை போதித்துக் கல்வியற்றக் குடிகளிடம் சகல வேஷப் பிராமணர்களும் சிறப்பைத் தேடிக் கொண்டார்கள். பிரம்மா முகத்திற் பிறந்தாரென்னும் சிலேடை மொழியையும் சிறப்புப் பெயரையு மறியாக் கல்வியற்றக் குடி களு மவற்றை நம்பி வேஷப்பிராமணர்களையே மிக்க சிறப்பிக்கவும் அவர்களுக்கே தான மீய்யவு மாரம்பித்துக் கொண்டார்கள். கல்வியற்றக் குடிகள் வேஷப்பிராமணர்களையே மிக்க நம்பவும் அவர்களது போதனைகளுக்குட்படவும் பூர்வ பெளத்த தன்மத்தையும், யதார்த்த பிராமணர்களையும் மறந்து அவர்களுக் கெதிரிகளாகவும் சீலங்களை மறக்கவும், நேரிட்டக் காரணங்கள் யாதெனில், பெளத்த வுபாசகர்களுக்குள் ஒரு மனைவியின்றி மறு மனைவியை சேர்க்கப்படாதென்றும், தன் மனைவியையன்றி அன்னியர் மனைவியை இச்சிக்கப்படாதென்றும் சீலநிலையை வகுத்திருந்தார்கள் அத்தகைய சீலத்திற்கு எதிரிடையாக வேஷப் பிராமணர்கள் தங்களுடைய தேவதைகளுக்கு இரண்டு பெண் சாதிகளை யுண்டுசெய்துள்ளதுமன்றி பெண்ணிச்சை யற்று பிராமனநிலை யடையவேண்டிய செயல்களை யகற்றி இரண்டு பெண்சாதி மூன்று பெண்சாதியுள்ள பிராமணர்கள் தோன்றிவிட்டபடி யால் உபாசகர்களும் தங்க ளிச்சையைப் போல் எத்தனைப் பெண் சாதிகள் வைத்துக்கொண்டாலும் குற்றமில்லை யென்னும் போதனையும், காமவிச்சைக்கேற்ற வழிகளுக்குமோ ரேதுவாயிற்று. பெளத்த தன்ம உபாசகர்கள் மதுவென்னும் லாகிரி வஸ்துக்களை யருந்தாமலும், மாமிஷமென்னும் புலாலைப் புசியாமலும் மிக்க சீலமாய் புத்ததன்மத்தைத் தழுவிவந்தார்கள். வேஷப் பிராமணர்களோ மாடுகளையும், குதிரைகளையும் சுட்டு அதன் புலாலைப் புசிப்பவர்களாகவும், மதுவென்னும் சுராபான மருந்துபவர்களாகவு மிருப்பதைக் கண்டு வருங் கல்வியற்றக் குடிகள் தங்க ளிச்சையைப்போல் சுராபானம் அருந்தவும், புலால் புசிக்கவுமாகிய வழிகளுக்குமோ ரேதுவாயிற்று. பெளத்த உபாசகர்கள் பொய்யாகிய வார்த்தைகளைப் பேசாமலும், பொய் சொல்லுவோர் வார்த்தைகளை நம்பாமலும் யாவரிடத்தும் மெய்யைப் பேசவேண்டுமென்னும்