பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 55 சீலமாம் சத்தியதன் மத்தில் நிலைத்திருந்தார்கள். வேஷ ப் பிராமணர்கள் உலக ஆசாபாச பந்தத்திலும், பேராசையிலும் வஞ்சினத்திலும், ஒழுக்கமற்ற நடையிலும், நாணமற்றச் செயலிலுமிருந்துக்கொண்டு தங்களை பிராமணர் பிராமண ரெனத் தாங்களே சொல்லித்திரிவது முதற்பொய் ஒர் பிரம்மாவின் முகத்தினின்றே பிறந்தவர்களென்று கூறித்திரிவது இரண்டாவது பொய் தங்கள் தேவதைகளைக் காண்பதற்கும், தெய்வகதி பெருவதற்கும் தங்களைக்கொண்டே மற்றவர்கள் பெறவேண்டு மென்பது மூன்ருவது பொய்; இந்த சாமி அவர்களுக்கு மோட்சங்கொடுத்தார் அந்தசாமி இவர்களுக்கு மோட்சங்கொடுத்தார் இந்தசாமி பூலோகத்தினின்று வான லோகம் போனர், அந்தசாமி பூலோகத்தினின்று வானலோகம் போனுர், அந்தசாமி வானலோகத்தினின்று பூலோகத்திற்கு வந்தாரென்பது நான்காவது பொய்; இத்தகைய தேவதைகளையே பெரும் பொய்க்கதைகளாகக் கேட்டுத்திரியும் கல்வியற்றக் குடிகளுக்கு உலக வாழ்க்கையிற் பொய்ச்சொல் லுவதால் யாது கெடு மென்னு மச்சமற்று பொய்யை மெய்யைப்போற் பேசவுமோரேதுவாயிற்று. பெளத்த வுபாசகர்கள் கொல்லா விரதத்தை சிரம்பூண்டு அகிம்சாதன் மத்தில் நிலைத்து சீவப்பிராணிகளைத் துக்கத்திற் காளாக்காமலும், துன்பஞ் செய்யாமலும் ஆதரித்து வந்தார்கள். வேஷப் பிராமணர்களோ பசுக்களையும், குதிரைகளையுங் கொன்றுத் தின்பதுடன் தங்கள் சாமிகளில் இந்த சாமி அவன் தலையை வாங்கிவிட்டார் அந்தசாமி இவன் தலையை வாங்கி விட்டாரென்னுங் கொலைத்தொழிலை ஒர் வகைக் கொண்டாட்டத் தொழிலாக நடாத்திவந்த விஷயம் கல்வியற்றக் குடிகளுக்கு இச்சையுடன் கொன்றுத் தின்னவும், அஞ்சாதக் கொலைச் செய்யவுமோ ரேதுவாயிற்று. பெளத்ததன்ம நீதியில் ஒடுக்கமாக நடக்கவேண்டிய விஷயங்கள் யாவும் வேஷப்பிராமண வநீதியில் விசாலமாக நடக்கும் வழிகள் யேற்பட்டு அஞ்சாது பொய்சொல்லவும், அஞ்சாது மதுவருந்தவும், அஞ்சாது கொலை செய்யவும், அஞ்சாது புலால் புசிக்கவுமாய யேதுக்க ளுண்டாகிவிட்ட படி யால் கல்வியற்றக் குடிகள் யாவரும் பெளத்த தன்மயிடுக்கமாகிய