பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 க. அயோத்திதாஸப் பண்டிதர் வழியில் நடவாது வேஷ பிராமணர்களின் விசால வழியில் நடக்க வாரம்பித்துக்கொண்டார்கள். அவற்றை யுணர்ந்த வேஷப்பிராமணர்களும் இன்னுமவர்களை மயக்கித் தங்கள் போதனைக்குள்ளாக்கி தங்கள் வேஷப்பிராமணச் செய்கைகளையே மெய்யென்று நம்பி உதவி புரிவதற்கும், தங்கள் மனம்போனப் போக்கின் விசால வழியில் நடந்து வித்தையையும், புத்தியையும், யீகையையும், சன்மார்க்கத் தையும் கெடுக்கத்தக்க காமியக் கதைகளையும், பொய்ச்சாமிப் போதனைகளையு மூட்டி விருத்திகெடச் செய்ததுமன்றி கிஞ்சித்துக் கல்வி கற்றுக்கொண்டால் தங்கள் பொய் வேஷங்களையும், பொய்ப் போதகங்களையும் உணர்ந்துக்கொள்ளுவார் களென்றறிந்து பூர்வக்குடி களைக் கல்விகற்க விடாமலும், நாகரீகம் பெறவிடாமலும், இருக்கத்தக்க யேதுக்களையே செய்துக்கொண்டு தங்கடங்கள் வேஷப்பிராமணர் செயல்களை மேலு மேலும் விருத்தி யடையச் செய்வதற்காய் பெளத்த தன்மத்தைச்சார்ந்தப் பெயர்களையும், பெளத்த தன்மத்தைச் சார்ந்த சரித்திரங்களையுமே ஆதாரமாக வைத்துக்கொண்டு அவைகளில் சிலதைக்கூட்டியும், குறைத்தும், அழித்தும், பழித்தும் தங்கட் பொய்ப் போதகங்களை நம்பத்தக்க யேதுக்களைத் தேடிக்கொண்டார்கள். அத்தகைய யேதுக்கள் யாதெனில்:- புத்தபிரானை சங்கஹறரென்றும் சங்கத்ருமரென்றும், சங்கமித்தரென்றும் கொண்டாடி வந்தார்கள், அவற்றுள் சங்கறர் உலக யெண்ணருஞ் சக்கரவாள மெங்கனும் தனது சத்திய சங்கத்தை நாட்டி அறத்தை யூட்டிவந்ததுகொண்டு அவரை ஜகத்திற்கே குருவென்றும், உலக ரட்சகனென்றும், சங்கஹற ஆச்சாரி யரென்றும் வழங்கி வந்ததுடன் அவர் பரிநிருவானமடைந்த மார்கழி மாதக் கடை நாள் காலத்தை 'சங்கஹறர் அந்திய புண்ணியகால மென்றும் சங்கறர் அந்திய பண்டி கை யென்றும் வழங்கி வந்தார்கள். இவ்வகையாக வழங்கிவந்த சங்கறரென்னும் பெயர் மட்டி லுங் கல்வியற்றக் குடி களுக்குத் தெரியுமேயன்றி அப்பெயர் தோன்றிய காரணங்களும் சரித்திர பூர்வங்களுந் தெரிய மாட்டாது. அவர்களுக்கு குருவாகத் தோன்றிய