பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 க. அயோத்திதாளலப் பண்டிதர் எங்குங் கிடைக்கக்கூடிய சாம்பலை நெற்றியி லணைவதும் பல பெளத்த வுபாசகர்கள் மகாபூதி யென்னும் சாம்பல் தீர்ந்துவிட்டவுடன் நெற்றியில் ஒன்றும் பூசாமலும் நிறுத்திவிட்டார்கள். இவற்றைக் கண்ணுற்றுவந்த வேஷப் பிராமணரு ளொருவர் நீலகண்ட சிவாச்சாரியென்று தோன்றி சிவனென் னும் ஒர் தெய்வமுண்டென்றும், அவருக்கு மடியிலோர் மனைவியும், சிரசிலோர் மனைவியும் உண்டென்றும் என்றுந் துடைமீதிருக்கப்பட்ட மனைவிக்கு யானைமுகப் பிள்ளையொன் றும், ஆறுமுகப் பிள்ளையொன்றும் தனது, வியர்வையின லுண்டு செய்த வீரபத்திரனென்னும் பிள்ளையொன்றும் உண்டெனுங் கதைகளை வகுத்துக்கொண்டு காலத்தைக் குறிப்பதற்கு சமயங்களென்று வகுத்துள்ள மொழியையும் தன்னையறிந்தடங்குவதற்கு சைவமென்று வகுத்த மொழியையும் எடுத்துக்கொண்டு சிவனைத் தொழுவோர்கள் யாவரும் சைவ சமயத்தோரென வகுத்து நூதன சமயமொன்றையுண்டுசெய்து அதனதரவால் சில சோம்பேறி சீவனங்களையுண்டுசெய்துக் கொண்டார்கள். அது எத்தகைய சீவனங்களென்னில்: இந்திரர்தேச முழுவதும் இந்திர ராம் சித்தார்த்தரது உருவம்போன்ற யோகசயன நிருவான சிலைகளும், யோக சாதன சிலைகளும், போதனரு ப சிலைகளுஞ்செய்து அந்தந்த மடங்களில் ஸ்தாபித்து வைத்துக்கொண்டு தங்கடங்கள் தாய் தந்தையர் இறந்துவிட்ட பின் அவர்களது அன்பு மாருது அவர்களது இறந்த நாளைக் கொண்டாடி வந்தது போல் சத்திய சங்க சமணமுநிவர்களும், உபாசகர்களும் மற்றும் பெளத்த குடிகளும் புத்தபிரான் பிறந்த நாளையும், அவராசை துறந்த நாளையும் அசோக மரத்தடியில் சோகமற்று நிருவாணமுற்ற நாளையும், காசி கங்கக்கரையில் சுயம் பிரகாசப் பரிநிருவானம் பெற்ற நாளேயும் மிக்க வன்புடனும் ஆனந்தத்துடனுங் கொண்டாடி அவரது போதன வுருவங்களை நோக்குங்கால் நீதிபோதனைகளை சிந்தித்தும், அவரது யோகசாதன உருவங்களை நோக்குங்கால் தங்கடங்கள் யோக சாதனங்களில் நிலைத்தும்,