பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 59 நீதிநெறி ஒழுக்கங்களில் சுகித்திருந்தார்களன்றி அவரது வுரூ வச்சிலைகளை நோக்கி எங்களுக்கு தனங்கொடு க்க வேண்டும், தானியங் கொடுக்கவேண்டும், சந்ததி கொடுக்க வேண்டு ம், பிண்னிகளை நீக்கவேண்டும், மோட்சமளிக்க வேண்டு மென சிந்தித்து அச்சிலைகளுக்குப் ! 65) లో நெய்வேத்தியஞ் செய்யமாட்டார்கள். காரணமோவென்னில், புத்த தன் மத்தின் படி தனம் வேண்டியவர்கள் வித்தையையும், புத்தியையும் பெருக்கி தங்களது விடாமுயற்சியால் தனம் சேகரிக்க வேண்டுமேயன்றி யெந்த தேவனுந் தனங்கொடுக்க மாட்டார். தானியம் வேண்டுவோர் விடாமுயற்சியால் பூமியைப் பண்படுத்தி நீர்வள வழிகளைத் தேடி பயிர்களைப் பாதுகார்த்து கதிருகளை யோங்கச்செய்து தானியத்தைப் பெறவேண்டுமேயன்றி யெந்த தேவனுந் தானியங் கொடுக்கமாட்டார். சந்ததி வேண்டுவோர் புருஷர்களுக்குள்ள சுக்கில தோஷங்களையும், இஸ்திரீகளுக்குள்ள சுரோனித தோஷங்களையும் நீக்கிக்கொண்டால் சந்ததியுண்டா மேயன்றி யெந்த தேவனும் சந்ததி கொடுக்கமாட்டார். தங்களுக்குத் தோன்றும் பூர்வ கன்ம வியாதியாயினுந் தங்களாலேயே தாங்கள் தேடிக்கொண்ட வியாதியாயினும் அவற்றின் செயல்களையுந் தோற்றங்களையு முணர்ந்து தங்களுக்குள் ஒடுங்கித் தாங்களே யப்பிணிகளை ஒடதிகளால் நீக்கிக்கொள்ள வேண்டுமேயன்றி யெந்த தேவனும் பிணிகளை நீக்கமாட்டார். துக்கமென்னும் நரகத்தை யொழித்து சுகமென்னும் மோட்சமடைய வேண்டியவர்கள் தங்களுக்குள்ள இராகத்துவேஷ மோகமென்னும் காம வெகுளி மயக்கங்களை யொழித்து மண்ணுசை, பெண்ணுசை, பொன்னசை யென்னு முப்பற்றுக்களை யறுத்து சாந்தம், அன்பு, யீகை யென்னும் பற்றற்ருன் பற்றுக்களில் நிலைத்தவர்களுக்கே மோட்ச சுகமாம் நித்திய வாழ்க்கைக் கிடைக்குமேயன்றி யெந்த தேவனும் மோட்சங்கொடுக்கமாட்டார். இஃது பெளத்த தர்மப் பிரியர்கள் ஒவ்வொரு வருள்ளத்தும் நிறைந்துள்ள தன்மமாதலின் வேஷப்பிராமணர்கள் நூதனமாக வெவ்வேறு சிலைகளமைத் துள்ள சிவாலயங்களில் பூர்வக்குடி களே வந்து பூசை நெய்வேத்தியம் செய்யும்படி யாகவும், தொழும் படியாகவும் போதிக்குங்கால் எக்காலு மவ்வகை பூசை நெய்வேத்தியஞ்