பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு Ꮾ 1 தேவர்களே அன்னியர் தாரங்களை ஆனந்தமாக யிச்சித்தக் கதைகளை எழுதிவைத்துக்கொண் டுள்ளவர்க ளாதலின் அவர்களை யடுத்த இத்தேசத்தோரும் அன்னியர் தாரமென்னும் அச்சமின்றி துற்செய்கையிற் பிரவேசிக்க வாரம் பித்துக்கொண்டார்கள். பொய்யைச்சொல்லியே வஞ்சிப்பதும் பொருள் பரிப்பதுமாகிய சோம்பேறி சீவனத்தையே மேலாகக் கருதி செய்து வந்தவர்களாதலின் அவர்களை யடுத்த வித்தேசக் குடிகளும் தங்களுக்குள்ளிருந்த வித்தை, புத்தி, யீகை, சன்மார்க்கம் யாவையு மறந்து வஞ்சினத்தாலும், சூதிலுைம், பொய்யாலும், கஷ்டப்படா சோம்பலாலும் பொருளை சம்பாதித்து சீவிக்கும்படி ஆரம்பித்துக்கொண்டார்கள். ஆரியர்கள் சுருபானமென்னும் மயக்க வஸ்துவை யருந்தி மாமிஷங்களைச் சுட்டுத்தின்று பெளத்தர்களால் மிலேச்ச ரென்னும் பெயரும் பெற்றவர்களாதலின் அவர்களையடுத்த வித்தேசக் குடிகளும் மது மாமிஷ மருந்தி மதோன் மத்தராகும் வழிகளுக் குள்ளாகிவிட்டார்கள். ஆரியர்களின் பிராமண வேஷங்கண்டு இத்தேசத்து ஆந்திரர்கள் பிராமண வேஷங் கொள்ளவும் ஆந்திரர்களைக்கண்டு மராஷ்ட்டகர்கள் பிராமண வேஷங்கொள்ளவும், மராஷ்ட்டகர்களைக்கண்டு கன்னடர்கள் பிராமண வேஷங்கொள்ளவும், கன்னடர்களைக் கண்டு திராவிடர்கள் பிராமண வேஷங்கொள்ளவும் ஆகிய மாறுபாடுகளால் ஒருவருக்கொருவர் ஒற்று மெயற்றும் கொள்ளல் கொடுக்கலற்றும் உண்பினம் உடுப்பின மற்றும் ஒருவரைக் கண்டால் ஒருவர் சீரும் வேஷப் பிராமணப் பிரிவினை விரோதங்கள் போதாது தொழிற்பெயர்கள் யாவையும் சாதிப்பெயர்களாக மாற்றி வித்தியா விரோதங் களாலும், விவசாய விரோதங்களிலுைம் ஒன்றுக் கொன்று சேராததிலுைம், ஒருவர் வித்தையை மற்றவர்களுக்குக் கற்பிக்காததிலுைம் பலவகைப் பிரிவினைகளும் ஒற்றுமெய்க் கேடுகளு முண்டாகி பெளத்த சங்கங்க ளழியவும், பெளத்த தன்மங்கள் மாறுபடவும், பெளத்த தன்மத்தை சிரமேற்கொண்டு நீதிநெறி வொழுக்கத்தினின்ற மேன் மக்கள் இழிந்த சாதியோர்களென்று தாழ்த்தப்படவும், நாணமற்ற வாழ்க்கை யிலும், ஒழுக்கமற்றச்செயலிலும், காருண்யமற்ற புசிப்பிலும், பேராசைமிக்க விருப்பிலு மிகுத்த மிலேச்சக் கீழ்மக்கள் உயர்ந்த