பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 6.3 புருஷர்கள் பூணு நூாலும் காவியுமுள்ள பிராமண வேஷ மணிந்தும், இஸ்திரீகள் தாங்கள் சுயதேசத்தில் கால்செட்டை யணிந்தவர்கள் இத்தேசத்தில் வந்து குடியேறி இத்தேசத்துப் பெண்கள் கட்டும் பிடவைகளைப்போல் கட்டிக்கொண்ட போதினும் அதைக் காற்செட்டைக்குப் பதிலாக கீழ்ப்பாச் சிட்டுக் கட்டிக்கொண்டு பெண்களுடன் செல்லுங்கால் தங்களில் ஒர் மூப்பனைப் பல்லக்கிலேற்றிக்கொண்டு புனநாட்டிற்குக் கிழக்கே வாதவூரென்னும், தேசத்தை யரசாண்டு வந்த நந்தனென்னும் அரசனிடம் வந்து சில சமஸ்கிருத சுலோகங்களைச் சொல்லி ஆசிகூறினர்கள். அவர்களம்மொழிகளைக் கேட்டவுடன் யேதோ யிவர்கள் விவேக மிகுத்தப் பெரியோர்களா யிருக்கவேண்டு மென்றெண்ணி திவ்யாசனமளித்து வேண வுபசரிப்பு செய்துவருங்கால் சமண முநிவர்களும் உபாசகர்களு மறிந்து அரசனிடஞ் சென்று இராஜேந்திரா தற்காலந் தங்களிடம் வந்திருக்கும் பிராமண வேஷதாரிகளை யதார்த்த அறஹத்துக்க ளென்ருயினும் சமண முநிவர்க ளென்ருயினும் தென்புலத்தா ரென்ருயினும் கருதவேண்டாம். சில காலங்களுக்கு முன்னிவர்கள் சிந்துாரல் நதிக்கரை யோரமாக வந்துக் குடியேறி இத்தேசத்தோரிடம் யாசக சீவனஞ் செய்துக்கொண்டே இத்தேச சகடபாஷையாம் சமஸ்கிருதங் கற்றுக்கொண்டு பூர்வக்குடிகள், அந்தணர், தென்புலத்தார், சமணமு நிவரென்று வழங்கப் பெற்றுப் பெரியோர்களைக்கண்டவுடன் பய பக்தியுடன் ஆசனமளித்து வேண வுதவி புரிந்து வருவதை யாசகஞ் செய்துக்கொண்டே நாளுக்கு நாள் பார்த்து வந்தவர்கள் சமணமுநிவர்களுடையவும், அந்தணர்களுடையவும், செயல்கள் யாதென்றறியா திருப்பினும் அவர்களைப் போல் வேஷமிட்டு தங்கள் சீவனத்திற்காய சுலோகங்களை யேற்படுத்திக்கொண்டு பிள்ளை பெண்சாதிகளின் சுகத்தை யநுபவித்துக்கொண்டே தங்களே அந்தணர்களென்றும், தென் புலத்தோரென்றும் பொய்ன்யச்சொல்லிக் கல்வியற்றக் குடிகளையும், காமியமுற்ற சிற்றரசர்களையும் வஞ்சித்து தந்திர சீவனஞ்செய்து வருகின்ருர்கள். தாங்களு மிவர்கள் வார்த்தைகளை நம்பி மோசம் போகாதீரென்று சொன்னவுடன் அரசன் திடுக்கிட்டு மிக்க ஆட்சரியமுடையவனகி பெண் மாய்கையிற் சிக்காதிருந்தவ