பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு Ꮾ 5 கொள்ள வேண்டுமென்று மடாதிபர்களாம் சமண முநிவர் களைத் தருவித்து புருசீகர்கள் சொல்லிவந்த சகல காரியங்களையுங் கூறி அவைகளின் அந்தரார்த்தத்தை வினவியபோது மடாதிபர்கள் சந்தோஷ மடைந்து இராஜேந்திரா மற்றுமுள்ள தேசத்தரசர்களும் இத்தகைய விசாரனைப் புரிந்திருப்பார் களாயின் புருசீகர்களின் பிராமணவேஷம் சகல குடிகளுக்குந் தெள்ளற விளங்கிவிடுவதுமன்றி இம்மிலேச்சர்களுந் தங்கள் சுயதேசம் போய்ச் சேர்ந்திருப்பார்கள். அத்தகைய விசாரணை யின்றி அவர்களது ஆரியக் கூத்திற்கு மெச்சி அவர்கள் போதனைக்கு வுட்பட்டபடியால் வேஷப்பிராமண மதிகரித்து யதார்த்தபிராமண மொடுங்கிக்கொண்டே வருகின்றது. ஆதலின் தாங்கள் கிருபை கூர்ந்து பெரும் சபைக்கூட்டி இவ்வாரியக் கூத்தர்களையும் மடாதிபதிகளாம் சமண முநிவர்களையுந் தருவித்து விசாரணைப் புரிந்து யாதார்த்த பிராமணத்தை நிலை நாட்ட வேண்டுமென்ருர்கள். அவ்வாக்கை யானந்தமாகக்கொண்டவரசன் பெளத்த சங்காதிபர்களையும் புருசீகர்களையும் சபா மண்டபத்திற்கு வந்து சேரவேண்டுமென வாக்கியாபித்தான். நந்தனென்னும் அரசன் உத்திரவின்படி வாதவூர் கொலு மண்டபத்திற்கு சங்காதிபர்களும், புருசிகர்களும் வந்து கூடி ர்ைகள். அரசனும் விசாரணை புருஷ சபாபதி யாக வீற்றிருந்தான். அக்கால் பேத வாக்கியங்களை கண்டுணர்ந்த சாம்பவனரென்னும் பெரியவ ரொருவரையுங் கூட்டி வந்து சபையில் நிறுத்திர்ைகள். அப்பெரியோனைக் கண்டப் புருசிகர்கள் யாவரும் ஏகோபித்தெழுந்து நந்தனை நோக்கி அரசே, இச்சபையிலிதோ வந்திருப்பவர்கள் பறையர்கள் சுடு காட்டிற் குடி யிருந்துகொண்டு பினங்களுக்குக் குழிகள் வெட்டி சீவனஞ் செய்து வருவதுமல்லாமல் செத்த மாடுகளையு மெடுத்துப்போய் புசிப்பவர்கள். இவர்களை சபையில் சேர்க்கவுங்கூடாது தீண்டவு மாகாதெனப் புருசீகர்கள் யாவருங் கூச்சலிட்டபோது அரசன் கையமர்த்தி புருசீகர்களை நோக்கி இத்தேசத்துப் பூர்வ மடாதிபர்களும் சங்கத்தவர்களும் கொல்லாவிரதம் சிரம்பூண்டவர்களு மாகியப் பெரியோர்களை நீங்கள் யாவரும் ஒன்றுகூடி கேவலமாகப் பேசுவதை நோக்கில்