பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ Ꮾ க. அயோத்திதாஸப் பண்டிதர் சிலர் சடைமுடி வளர்த்தும் சிலர் மொட்டையடித்துங் கருத்த தேகிகளாய் சாதனத்தால் சாம்பல் பூர்த்துள்ள படி யால் அவர்களை யிழிவாகப் பேசித் தூற்றுவதுடன் செத்தமாட்டைப் புசிப்பவர்களென்றுங் கூறும் உங்கள் மொழிகளைக்கொண்டே நீங்கள் உயிருள்ள மாடுகளை வதைத்துத்தின் பவர்களாக விளங்குகின்றது. இத்தகைய விஷயங்களைப்பற்றி யெம்க்கோர் சங்கையுங் கிடையா குழிவெட்டு வோன யிருப்பினும், அரசன யிருப்பினும், ஏழையாயிருப்பினும், கனவாயிைருப்பினும் பேதமின்றி சமரசமாக விச்சபையில் வீற்று எமக்குள்ள சங்கையை நிவர்த்தித்தல் வேண்டும். அவை யாதெனில், பெண்சாதிப் பிள்ளைகளுடன் பெருங் கூட்டத்தோராகிய நீங்கள் யாவரும் பிராமணர்களா, பெண்சாதி பிள்ளைகளுடன் சுகபோகங்களை யநுபவித்துக்கொண்டு பொருளிச்சையில் மிகுத்தவர்களே பிராமணர்களென்று கூறப்போமோ, உலக பாச பந்தத்தில் அழுந்தியுள்ளவர்களுக்கும் பிராமணர்க ளென்போருக்கும் உள்ள பேதமென்னை, எச்செயலால் நீங்கள் உயர்ந்தவர்களா னிர்கள் இவற்றை தெளிவாக விளக்கவேண்டு மென்று கூறினன். அவற்றை வினவியப் புருசீகருள் சேஷனென்பவ னெழுந்து சாம்பவனுரை நோக்கி நீவிரெந்தவூர் எக்குலத்தா ரென் ருன். அதற்கு சாம்பவர்ை மாறுத்திரமாக வந்தவூர் கருவூர், சொந்த குலம் சுக்கிலமென் ருர். இத னந்தரார்த்தம வேஷப் பிராமன சேஷனென்பவனுக்கு விளங்காமல் சுடலையில் குழிவெட்டித் தொழிலும், சாங்கையன் குலமுமல்லவா வென்ருன். அதற்கு சாம்பவர்ை நான் குழிவெட்டியானல்ல ஞானவெட்டி யான். சாங்கைய குலத்தானல்ல சாக்கைய குலத்தானென்ருர். சாக்கை யர் குலத்தாரென்ருல் அவர்களுற்பத்தி யெவ்வகை யென்ருன். கலிவாகு சக்கிரவர்த்தியால் ஒலிவடிவாக வகுத்துள்ள கணிதங்களை ஆதி பகவனருளால் வரிவடி வாக வியற்றி வருங்கால போங்காலங்களை அறிந்து சொல்லக்கூடிய சோதிடர் களை வள்ளுவரென்றும், சாக்கையரென்றும், நிமித்தகரென்றும் வகுத்துள்ளவர்களின் வம்மிஷ வரிசையோனென்ருர்,