பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Ꮾ 8 க. அயோத்திதாஸ்ப் பண்டிதர் மூன்ருவது பறையர்கள் யறையர்களென்று சொல்லித் திரிந்ததுடன் மடாதிபர்களையும், சாக்கையர்களையும் பறையர்க ளென்று இழிவுபடக்கூறும்படித் தங்களை சுவாமி சுவாமியெனத் தொழுதும் திரியும் அறிவிலிக் குடி களுக்குங் கற்பித்து இழிவுபடுத்தி வந்தார்கள். அவற்றைக் கேள்வியுற்ற மடாதிபர்கள் மிலேச்சர்களாம் ஆரியர்களை கர்வபங்கஞ் செய்யுமாறு 'பறையவைதேதடா பறைச்சியாவதேதடா இறைச்சி தோலெலும்பிலே யிலக்க மிட்டிருக்குதோ என்னும் வேண்டியப் பாடல்களைப் பாடி மிலேச்சர்களுடன் சம்மந்தப்பட்டுள்ள கல்வியற்றக் குடிகளுக்கும், காமியமுற்ற வரசர்களுக்கும் விளங்கும்படி செய்து வருங்காலத்தில் பெளத்தர்கள் யாவருக்கும் இப்பறையர் களென்னும் பெயரை யளித்து பாழ்படச் செய்துவிட்டு ஆரியர்களது பிராமண வேஷத்தையும், அவர்களது பொய்மதக் கோஷத்தையும் பெருக்கிக்கொள்ளுவதற்காகத் தங்களையடுத்தக் குடிகளை யடுத்துப் பறைப்பாம்பு பாப்பாரப் பாம்பென்றும், பறைமயின பாப்பார மயிெைவன்றும், பறைப் பருந்து பாப் பாரப் பருந்தென்றும் சீவர்களுக்கில்லாப் பெயர்களை வழங்கச்செய்ததுமன்றி நாய்களிற் பறை நாய்ப் பறை நாயென மட்டிலும் வழங்கச்செய்து பறை நாயென்பதற்கு யெதிர் மொழியாய் பாப்பாரநாயென வழங்கினல் தங்களுக்குத் தாழ்ச்சி யுண்டாமெனக் கருதி பறை நாயென்னும் மொழியை மட்டிலும் வழங்கச்செய்து வருகின்ருர்கள். யிதன்றி பெளத்த வரசர்களும், பெளத்த குடிகளும் சேர்ந்து வாசஞ்செய்து வருமிடங்களுக்கு சேரி, சேரி என வழங்கிவருவ தியல்பாம். அம்மொழியையே ஆதாரமாகக் கொண்டு அவர்கள் வாசஞ்செய்யு மிடங்களுக்கும் பறைச்சேரி யென்னும் பெயரைக் கொடுத்து தங்களைச் சார்ந்தவர்களால் வழங்கச்செய்துவிட்டுத் தாங்கள் சிந்து ரல் ஆற்றின் அக்கரையோரமாக வந்து மண்ணைத் துளைத்துக் குடியிருந்துக் கொண்டு இவ்விடம் வந்து பிச்சை யிரந்துண்ணுங்கால் தங்களை நீவிர் யாவரென்று கேட்போருக்கு அக்கரையோரத்தார், அக்கரை யோரத்தாரென வழங்கிவந்த மொழியையே ஆதாரமாகக்கொண்டு இப்போ திவர்க ளிங்குவந்து வாசஞ் செய்யுமிடங்களுக்கு அக்கரை