பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிகள் புலப்படுத்திய பருண்மையான சான்றுகளை நிராகரித்துவிட்டு கற்பனைக் கதைகளாம் புராணங்களை வரலாற்று ஆதாரங்களாக்க முயல்வதையும், தம் விருப்பு வெறுப்புக்கேற்ப வரலாற்றுப் பாடங்களைத் திரித்து எழுதுவதையும் நாம் காண்கிறோம். இத்தகைய போக்கு ஆரிய மிலேச்சர்கள் வழிவழியாய் கைக்கொண்டு வரும் வஞ்சகச் செயல்களுக்குச் சான்று பகர்கிறது. 'அந்தந்த சரித்திரக்காரர்கள் காலவரசர்களையும், அவரவர்கள் ஆண்டு வந்த தேசங்களையும் குறிப்பிட்டிருக்கின் றார்கள். நாம் அவைகள் யாவற்றையும் விடுத்து இத்தேசத்துள் நிறைந்திருந்த வித்தை, புத்தி, ஈகை, சன்மார்க்கம் குறைந்து சாதிபேத மதபேதத்தினால் வஞ்சினம், பொறாமெ நிறைந்து நாளுக்கு நாள் தேசம் பாழடைந்து வருவதற்குக் காரணமாய சரித்திரம் ஏதுண்டோ அவைகளை மட்டிலும் இவ்விடம் வரைந்துள்ளோம்” என்று அயோத்திதாஸர் தம் நோக்கத்தைத் தெளிவு படுத்திகின்றார். இக்கூற்று வரலாறு எழுதுவதில் உள்ள பல்வேறுபட்ட போக்குகளை எடுத்துக்காட்டுவது மட்டு மின்றி ஒடுக்கப்பட்ட மக்கள் நோக்கிலிருந்து எழுதப்பட்ட வரலாறு இதுவென்றும் காட்டுகிறது. இன்று சபால்டர்ன் ஆய்வுகள் (Subaltern studies) GT Göt gmj sSy Go) l uu ft Gmr Li L1G) 55 Ú U G) lb சிந்தனைகள் முன்வைக்கின்ற வரலாறெழுதுமுறை குறித்த கூறுகளை அயோத்திதாஸரின் இந்த ஆய்விலே நாம் காண்கிறோம். இந்த விதத்தில் தமிழில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலையிலிருந்து வராற்றை அணுகி எழுதப்பட்ட முதல் சபால்டர்ன் வரலாறு (Subaltern History) இதுவேயென்றும் கூறலாம். அயோத்திதாஸரின் இந்த வரலாற்றாய்வு வெறும் கற்பனைக் கதைகளை ஆதாரமாகக் கொண்டதல்ல. இந்நூலின் தொடர்ச்சியாக வைத்து, அண்ணல் அம்பேத்கரின் பார்ப்பனி யத்தின் வெற்றி என்ற நூலைப்படித்தால் பண்டிதரின் அறிவுத்திறன் நமக்கு புலப்படும். இந்திய வரலாறு தொகுக்கப்பட்ட வழிமுறைகளில் தனக்கு திருப்தி ஏற்படவில்லையெனக் குறிப்பிடும் அம்பேத்கர், தனது அதிருப்திக்கான காரணத்தையும் கூறுகின்றார். இந்தியாவை