பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 5 க. அயோத்திதாளலப் பண்டிதர் பெரியோனென்றும், நானமும் ஒழுக்கமும் உழைப்பு மிகுத்தோனைத் தாழ்ந்தவனென்றும் கூறும்படியான அவிவேகச் செயலால் பஞ்சஸ்கந்தங்களின் பாகுபாடுகளும், பஞ்ச விந்திரியக் கூறுகளும், திரிகரண சுத்தங்களும், முக்குனத்தின் ஒழிவுகளும், சகல மனுக்களுக்கும் பொருந்தவிருக்குமேயன்றி ஒருவருக்கொருவர் மாறுபட விளங்காது. இவற்றுள் ஒவ்வொரு மனிதனும் தனது துஷ்டச்செயலால் துட்டனென்றும், நற்செயலால் நல்லோனென்றும் அதாவது தீச்செயலால் தீயனென்றும், நற்செயல்ால் நியாயனென்றும் அழைக்கப்படுவான். தீயச்செயலுள்ளவர்களை நியாயரணு கார்கள். நியாயச்செயலுள்ளோருக்குத் தீய ரஞ்சுவார்கள். இது நீதி நூற்களின் போதனையும் சம்மதமுமாகும். அங்ங்னமின்றி நீதியும், நெறியும், வாய்மெயு மிகுத்தப் பெரியோர்களை தீயரென்றும் நீதியற்றும், நெறியற்றும், வாய்மெயற்றும் பொருளாசை மிகுதியால் நாண வொழுக்கினராயுள்ள மிலேச்சர்களை நாயரென்றுங் கூறித்திரியும் மாறுபாடுகளை விளக்கிவந்தும் அரசனுக்கு அவைகள் சரிவர விளங்காததில்ை நத்தைைர நோக்கி ஐயா இச்சபையில் தத்துவோற்பத்தி யோக்சாதனம், பஞ்சகல்ப முதலியவைகளை நான் தெரிந்து கொண்டபோதினும் வடமொழியில் பிராமணனென்று சொல்லும்படியான வார்த்தையி னுற்பவமும் அக்கூட்டத் தோரின் செயலும் எமக்கு விளங்காததில்ை அவற்றை விளக்கவேண்டுமென்று வேண்டினன். உடனே நத்தன ரெழுந்து இராஜேந்திரா அவைகள் யாவும் வடமொழியிற் றெளிவாக வரைந்துவைத் திருக்கின்ருர்கள். யாங்களியாவரும் தென்மொழியிற் பழகிவிட்டபடி யால் வடமொழியிலுள்ள பிராமண னென்னு மொழிக்குத் தென் மொழியில் அந்தணனென்று வகுத்திருக்கின்ருர்கள். அவ்வந்த ணனென்னும் மொழியின் பெயரோவென்னில் காமக்குரோத லோபமற்று சாந்தம் நிறைந்து தண்மெயுண்டாகி சருவ சீவர்கள் மீதும் கருணைகொண்டு காக்கும் அறமிகுத் தோர்களேயே அந்தணர்களென்று வகுத்திருக்கின்ருர்கள். அத்தகைய குணசாதனன் கோடி யில் ஒருவன் தோன்றுவதே மிக்கவரிதம். இதுவே தென் புலத்தாராம் அந்தணர்களின்