பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 7.3 செயலென்னப்படும். ஆனல் வடமொழியிலுள்ள பிராமண னென்னும் பெயர் பெண் டு பிள்ளைகளென்னும் பெரும் பற்றற்று இருபிறப்பாளர்களாகி மறுபிறப்பற்று பிரம்மனம் வீசும் பெரியோர்களுக்கே பிராமணர்களென்னும் பெயர் பொருந்துமேயன்றி ஜீவகாருண்ய மற்று சகல பற்றுக்களும் பெற்று அன்பென்பதற்று தீரா வஞ்ஞானமுற்று வஞ்சகம் வெளிவீசும் பஞ்சைகள் யாவரையும் பிராமணர்களென்று சொல்லுவதற்காகாது. இவர்களோ பெண்டு பிள்ளைகளுடன் பிராமண வேஷமிட்டு பேதை மக்களை வஞ்சித்து பொருள் பரித்துத் தின்று வருகின்ருர்கள். இவர்களது. கூட்டு ரவையும் இவர்களித் தேசத்திற் குடியேறிய காரணங்களையும், வங்கரால் முறியடிப்பட்டு சிந்துாரல் நதிக் கரை யோரமாக வந்துக் குடியேறி குமானிடர் தேசம் வந்தடைந்து யாசக சீவனத்தால் ஆரியக்கூத்தாடி பிச்சையேற் றுண்டு பிராமணவேஷ மடைந்த வரலாறுகளையுந் தெள்ளறத் தெளிந்துக்கொள்ள வேண்டுமாயின் பாண்டி மடத்தின் பூர்வ மடாதிபதிகளில் அஸ்வகோஷ ரென்பவரும், வஜ்ஜிர சூதரென்பவரும் பொதியைச்சாரலி லிருக்கின்ருர்கள். அவர்க ளுக்குப் பல்லக்கையும் வேவுகர்களையு மனுப்பி வரவழைத்து இப்புருசிக தேசத்தோராம் ஆரியர்களின் பூர்வங்களை விசாரிப்பீர்களாயின் சருவ சங்கதிகளும் தெரிந்துக் கொள்ளுவீர்களென்று கூறியவுடன் அரசன் சந்தோ வித்து வேவுகர்களுக்கு வேண்டிய பொருளளித்து பல்லக் கெடுத்து போய் பொதியைச் சாரலிலுள்ள பெரியோர்களை யழைத்து வரும்படி வோலைச்சுருளளித்தான். வேவுகர்கள் ஒலைச்கருளையும், பல்லக்கையு மெடுத்து பொதியைச்சார லேச்சார்ந்து உத்தர மடத்தின் முகப்பில் வீற்றிருந்த பெரியோனும் அஸ்வகோஷரைக் கண்டு வணங்கித் தாங்கள் கொண்டு சென்ற வோலைச் சுருளை அவரிடங் கொடுத்தார்கள். அச்சுருளை வாங்கி வாசித்த அஸ்வகோஷ ரெழுந்து அவ்விடமுள்ள தனது மானுக்கர்களுக்குப் போதிக்க வேண்டிய போதனைகளை பூட்டி விட்டு பல்லக்கிலேறி நந்தனது சபாமண்டபத்திற்கு வந்து சேர்ந்தார். அதனை யுனர்ந்த வரசனும் அமைச்சர்களு மெதிர்நோக்கி வந்து அஸ்வகோஷரை வணங்கி