பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி நான்கு 75 சகலவு பாதைகளும் நீங்கும்படியான சிறந்த செயலாம் பிரமமணத்தால் பிராமணரென்றும் பெயர் தோன்றியதுமன்றி, தாயின் வயிற்றினின்று பிறந்த பிறப்பொன்றும், தேகத்தினின்று சோதிமயமாக மாற்றிப் பிறக்கும் பிறப்பொன்று மாகியப் பரிநிருவான இருவகைப் பிறப்பினைக்கொண்டு இரு பிறப்பாளரென்றும் அழைக்கப்பெற்ருர்கள். உலகத்தில் தோன்றியுள்ள சகல சீவர்களும் பிறப்பு, பிணி, மூப்பு, சாக்காடென்னும் நான் வகைத் துக்கத்தில் வாதைப்படுவது பிரத்தியட்ச வனுபவமாதலின் அத்தகைய நான்குவகைத் துக்கத்தினின்று விடுபட்டு சதா விழிப்பிலும் நித்தியானந்தத்திலு மிருப்பவர்களாதலின் பாசபந்தத்திற் கட்டு பட்டுள்ள மதுக்கள் யாவரும் அவர்களை மகடபாஷையில் அறஹத்துக்களென்றும், சகட பாஷை யில் பிராமணர் களென்றும், திராவிட பாஷையில் அந்தணர்களென்று மழைத்து அவர்களது அழியா சிறப்பால் அடிபணிந்தும் வந்தார்கள். இதோ வுமதெதிரில் பெருங்கூட்டமாகப் பெண் டு பிள்ளைகளுடன் வந்து நின்றுகொண்டு தங்கள் யாவரையும் பிராமணர்களென்று பொய்யைச்சொல்லி புலம்பித்திரியு மிக்கூட்டத்தோர் யாவரும் புருசிக தேசத்தோர்களாகும். சில நாட்களுக்கு முன்பு வங்கருக்கும், புருசீகருக்கும் பெரும் போருண்டானபோது வங்கரால் புருசிகர் முறியடிப்பட்டு சிந்துரல் நதிக்கரையோரமாம் குமானிட தேசஞ் சார்ந்து கரையோர மண்ணைத்து 2ளத்து அவைகளிற் குடி யிருந்து கொண்டு இக்கரைக்கு வந்து ஆந்தரம், கன்னடம், மராஷ்டகம், திராவிடமென்னும் நான்கு வகுப்பார்களிடம் யாசகம் செய்துக்கொண்டுபோய் பெண்டு பிள்ளைகளைக் காப்பாற்றி வந்தார்கள். இத்தேசத்தோருள் பெரும்பாலும் வருணத்தில் கருப்பும், மானிறமும் பெற்றவர்களாதலின் புருசீகர்களின் மிக்க வெளுப்புள்ள தேகத்தைக் கண்டவுடன் ஆட்சரியமாகப் பிச்சையளிப்பதுடன் பெண்டு பிள்ளைகளுடன் மாறி மாறி ஒருகாலைத் தூக்கியாடும் ஆரியக் கூத்திற்கும் ஆனந்தித்து அல்லவரும் பிச்சையளித்து ஆதரித்து வந்தார்கள். இத்தகைய வாரியக்கூத்தாடி பிச்சையேற்பினும் காரியத்தின் மீது கண்ணுடையவர்களாய், தங்களுடைய தேசத்தில் பேசிவரும்