பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78 க. அயோத்திதாளலப் பண்டி தர் திரி பீட வாக்கியமென்றும், திரிபேத வாக்கிய மென்றும், திரிசுருதி வாக்கியமென்றும், திரிமத்திர வாக்கியமென்றும் வழங்கி வந்த மும்மொழியும், தன்மகாய ரு பகாயங்களை விளக்கி நித்தியசுகத்திற் காளாக்கு மொழிகளாதலின் அவற்றை பிரதம திரிகாய மந்திரமென்றும்; வாக்குசுத்தம், மனேகத்தம், தேகசுத்த மிவற்றை துதிய திரிகாய மந்திரமென்றும் வழங்கி வந்தவற்றுள் இவ்விரு திரிகாய மந்திரங்களையும் பொதுவாக காயத்திரி மந்திரமென வழங்கி வந்தார்கள். அதாவது எடுத்த தேகம் சீர்குலைந்து மரண துக்கத்திற்காளாகி மாளா பிறவியிற் சுழலாது மும்மந்திரங்களாம் மேலாய வாலோசனையில் நிலைத்து பாபஞ்செய்யாமலும், நன்மெய் கடைபிடித்தும், இதயத்தை சுத்திசெய்தும், மாளாபிறவியின் துக்கத்தை யொழித்து நித்திய சுகம் பெரும் பேரானந்த வாலோசனையாதலின் அம்மும்மந்திரங்களையும் திரிகாய மந்திரமென்றும் காயத்திரி மந்திரமென்றும் வழங்கிவந்தார்கள். இவற்றுள் மந்திரமென்பது ஆலோசனை யென்றும், மந்திரியென்பது ஆலோசிப் பவனென்றுங் கூறப்படும். இதனந்தரார்த்தமும், காயத்திரி யென் பதி னந்தரார்த்தமும் இவர்களுக்குத் தெரியவே மாட்டாது. இத்தகைய வேஷப்பிராமணர்களிடம் உபாசகர்கள் சென்று காயத்திரி மந்திர மருள வேண்டு மென் னுங்கால் வியாரங்களிலுள்ள யதார்த்த பிராமணர்கள் போதிக்கும் திரிகாய வாலோசனைகள் இவ்வேஷ பிராமணர்களுக்கு விளங்காதிருப்பினும் அவற்றைக் காட்டிக்கொள்ளாது அவைகளை மிக்கத் தெரிந்தவர்கள்போல் நடித்து காயத்திரி மந்திரம் மிக்க மேலாயது அவற்றைச் சகலருக்கும் போதிக்கப்படாது எங்களையொத்த வாயிரம் பிராமணர்களுக்கு பொருளுதவிசெய்து தொண்டு புரிவோர் களுக்கே போதிக்கப்படு மெனப் பொய்யைச்சொல்லி பொருள் பரித்து வடமொழி சுலோகங்களில் ஒவ்வோர் வார்த்தையை யே தேனுங் கற்பித்து அதையே சொல்லிக் கொண்டிருங்கள். இம்மந்திரத்தை மார்பளவு நீரினின்று சொல்லி வருவீர்களாயின் தனசம்பத்து, தானிய சம்பத்துப் பெருகி சுகமாக வாழ்விர்களென்று உறுதிபெறக் கூறி ஆசைக்கருத்துகளை யகற்றி மெய்ஞ்ஞானமடையும் வழிகளைக் கெடுத்து ஆசையைப்பெருக்கி அல்லலடையும் அஞ்ஞான