பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 79 வழிகளில் விடுத்து மதுமக்களின் சுருசுருப்பையுஞ் செயல்களையு மழித்து சோம்பலடையச் செய்வதுடன் அவர்களது விவேக விருத்திகளையுங் கெடுத்து வருகின்ருர்கள். விருத்தியின் கேட்டி ற்கு ஆதாரங்கள் யாதெனில் தங்களையே யதார்த்த பிராமணர்களென்று நம்பி மோசத்திலாழ்ந்துள்ள அரசர்களையும், வணிக தொழிலாளர் களையும், வேளாளத் தொழிலாளர்களையும் கல்வியைக் கற்கவிடாது அவனவன் தொழிற்களை அவனவனே செய்துவர வேண்டுமென்னுங் கட்டுப்பாடுகளை வகுத்து இவர்களை யடுத்துள்ள வரசர்களைக்கொண்டே சட்டதிட்டப்படுத்தி கல்வியின் விருத்தியையும், தொழில் விருத்தியையும் பாழ்படுத்தி வருகின்ருர்கள். அவற்றிற்குக் காரணமோவென்னில் கல்வியில் விருத்தி யடைவார்களாயின் தங்களது பிராமண வேஷமும் பொய்க்குருச் செயலும், பொய்ப் போதகங்களு முனர்ந்து மறுத்துக்கேழ்க்க முயலுவார்கள். வித்தைகளில் விருத்தி பெருவார்களாயின் தங்களை மதிக்கமாட்டார்கள், தங்கள் பொய்ப் போதனைகளுக்கும் அடங்கமாட்டார்களென்பதேயாம். இவர்களது வயிற்றுப் பிழைப்பிற்காக வித்தேசத்து சிறந்த மடங்களையும், சிறந்த ஞானங்களையும், சிறந்த கல்விகளையும், சிறந்த வித்தைகளையும், சிறந்த நூற்களையுமழித்து தங்களது வேஷப்பிராமணத்தை விருத்திசெய்து வருவதுடன், அரசே இந்திர வியாரங்களாகும் அறப் பள்ளிகளில் தங்கியுள்ள அந்தணர்கள் மார்பிலணைந்திருக்கும் முப்புரிநூல் அதாவது மதானி பூநூல் மேலாய வந்தரங்க ஞானத்தை யடக்கியுள்ளது. அதனை அணிந்துக்கொள்ள செய்வித்ததும், அணிந்துகொள்ளும் பலனும் இந்த வேஷப்பிராமணர்களுக்குத் தெரியவே மாட்டாது. அதன் அந்தரங்க விளக்கமாகும் உபநயணமென்னும் பெயரும் அதனது பொருளும் இவர்களுக்கு விளங்கவே மாட்டாது. அதன் பேரானந்த ஞான ரகசியம் யாதெனில் சத்திய சங்கத்துள் சேர்ந்துள்ள சமண முநிவர்கள் திரிகாய மந்திரமாம் காயத்திரி மந்திரத்துள் நிலைத்து கொல்லா விரதம், குடியா விரதம், பிறர்தார நயவா விரதம், பிறர்பொருளை யிச்சியா விரதம், பொய்சொல்லா விரதமாகிய பஞ்சசீலத்தில் லயித்து பற்றறுத்த செயலுங் குணங் குறிகளும் ஞாசிைரியர்களாகும் அறஹத்துக் களுக்குத்