பக்கம்:க. அயோத்திதாஸப் பண்டிதர் சிந்தனைகள் 4, தலித் சாகித்ய அகாடமி.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைகள் - தொகுதி : நான்கு 8 I குடிகளுக்குந் தெரியாது. அதன் ஞானக்கருத்து தெரியாதிருப் பினும் சமண முநிவர்களுக்கு உபநயன மளிக்குங்கால் சகல குடிகளையுந் தருவித்து உபநயனம் பெற்ருேரை சுட்டிக்காட்டி வேண வுதவி செய்யும் படிக் கேட்டுக்கொண்டவுடன் அவுற்பிரசாதமளித்து ஆனந்தமுடன் அனுப்புவ துமட்டிலும் அவர்களுக்குத் தெரியும். அவற்றைத் தெரிந்தவர்கள் இந்த வேஷப்பிராமணர்களை யடுத்து வணங்கி வியாரங்களிலுள்ள பிராமணர்கள் உபநயன மளிக்குங்கால் அவுற்பிரசாத மளித்து சகலரையும் ஆனந்திக்கச் செய்வார்கள். அவ்வகையாக நீங்கள் செய்யாத காரணமென்ன வென்று வினவியவுடன் அதனந்த ரார்த்தம் இவர்களுக்குத் தெரியாதிருப்பினும் கல்வியற்றக் குடிகளிடந் தங்களுக்குத் தெரிந்த வைபோ லபிநயித்து தங்கள் பிள்ளைகளுக்கு உபநயனஞ் செய்விக்கப்போகின்ருேம். அவற்றிற்குத் தேங்காய், பழம், அவுல்கடலை கொண்டு வருவதுடன் பணவுதவியுஞ் செய்ய வேண்டுமென்றுபெற்று தங்கள் பெண்டு பிள்ளைகளுடன் புசித்துத் தங்கள் பிள்ளைகளும் அத்தகைய நூலே யணிந்து வருகின்ருர்கள். ஏழைக்குடிகள் அவுற்பிரசாதங் கொடுக்க வில்லையேயென்று கேட்டால் தேவர்களுக்களிக்கும் அவுற் பிரசாதத்தை உங்களுக் களிக்கலா காதென் றேய்த்து பணம் பரித்து வருவது மல்லாமல் அவுற் பிரசாதங் கொடாது தாங்களே தின்று கொழுத்துலாவுவதற்கு உபநயணமென்னும் மொழியும் சீவனத்திற்கு ஒர் வழியைக் கொடுத்துவிட்டது. புல்லினின்று புழுக்களும், புழுக்களினின்று விட்டிலும் மாறி இருபிறப்படைவதுபோல் சமணமுநிவர்கள் உபநயனமாம் ஞானக்கண் பெற்று உண்மெ யுணர்ந்து புளியம்பழம் போலும், ஒடு போலும், உடல்வேறு உண்மெய் ஒளிவேருகப் பரி நிருவான மடைவதை ஒர் பிறப்பாகவும், தாயின் வயிற்றிற் பிறந்த பிறப்பை யோர் பிறப்பாகவுங் கொண்டு அவர்களை இருபிறப்பாளரென சமணமுநிவர்கள் கொண்டாடித் துதித்து வந்தார்கள். அதனது சிறந்த காட்சியோவெனில் மனிதன் தாய் வயிற்றுநின்று பிறந்து வளர்ந்து பல பற்றுக்களால் தீயச்செயலை வளர்த்து தீயச்செயலில் நிலைத்துவிடுவான யின் தீராப்